பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • சாந்தியும் செழிப்பும் கோழைகளை அபிவிருத்தி செய்யும்.

கடுமையான நிலையே தைரியத்திற்குத் தாய் ஷேக்ஸ்பிய

  • கோழைகள் தம்முடைய மரணத்திற்கு முன்பே பலமுறை இறந்து போகின்றனர். வீரர்கள் மரணத்தின் உருசியை ஒருமுறையே அறிகின்றனர். அ ஷேக்ஸ்பியர்

கெளரவம்

  • என் கெளரவமே எனது உயிர் இரண்டும் ஒன்றிலேயே வளர்கின்றன. கெளரவத்தை என்னிடமிருந்து எடுத்துவிட்டால், என் வாழ்க்கை முடிந்துவிடும். அ ஷேக்ஸ்பியர்
  • என் கெளரவத்திற்குக் கேடு வருவதைவிடப் பதினாயிரம் மரணங்களை வரவேற்கிறேன். அ அடியென்
  • தன் கெளரவத்திற்காக மகிழ்ச்சியோடு துணிந்து முன்வராத நாடு கழிவானது. அ வில்லர்

சகிப்பின்மை

  • ஒவ்வொரு சகாப்தத்திலும். ஒவ்வோர் இராஜ்யத்திலும் சகிப்பின்மை சாபக்கேடாக இருந்துவந்திருக்கிறது. ைபீச்சர்
  • ஒரு மதத்தில் வெறி கொண்டிருப்பதைக்காட்டிலும், எம்மதமும் இல்லாதிருத்தல் மேலாகும். அ பென்
  • சீர்திருத்தவாதிகளின் சகிப்பின்மையையே சைத்தான் மிகவும்

விரும்புகிறான். அவர்களுடைய சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் கண்டே அவன் மிகவும் அஞ்சுகிறான் க. ஜே. ஆர். லோவல்