பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

-- - மாற்றிச் செம்மையாக நடந்துகொள்ளும்படி கற்பிப்பதே யாகும். அ ரஸ்கின் முதலாவதாக மாணவன் தன் தாய்மொழியில் புரிந்து கொள்ளவும். பேசவும், படிக்கவும். எழுதவும் நாம் கற்பிக்: வேண்டும். அ எச். ஜி. வெல்ஸ் ஒழுக்க நெறியின் வளர்ச்சியே கல்வியின் முழு நோக்கம் அல்லது பெருநோக்கமாயிருக்க வேண்டும். அ ஒ' ஷி சர்வ ஜனக் கல்வியில்லாமல், சர்வ ஜன வாக்குரிமை ஒரு தீமையாகிவிடும். அ எச்.எல். வேலண்ட் நன்றாகக் கற்பிப்பதானால், எந்த விஷயத்தைக் கற்பித்தாலும் எனக்குக் கவலையில்லை. அ டி.எச். ஹக்ஸ்லி கல்வியின் முழுநோக்கம் மனவளர்ச்சி. அ ஷெர்வுட் ஆண்டர்ஸன் கற்பிப்பதன் இரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கின்றது. அ எமர்ஸன் தேசங்களுக்கு மலிவான பாதுகாப்பு. கல்வி. அ பர்க் மானிட உள்ளத்தின் கல்வி. தொட்டிலில் தொடங்குகின்றது. அ டி.கோகள் பொதுக் கல்வியே அரசாங்கத்தின் முதல் இலட்சியமாயிருக்க வேண்டும். அ நெப்போலியன் கல்வி அழகே அழகு. ைநாலடியார் எம்மை உலகத்தும் யாம்காணோம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. அ நாலடியார் கல்வி கரையில, கற்பவர் நாள்சில. ைநாலடியார் கேடில் விழுச்செல்வம் கல்வி அ திருவள்ளுவர் i.