பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ri: 135 ஊக்கமுள்ள ஆன்மா சிரமமில்லாத வெற்றியை வெறுக் கின்றது. தாக்குவோனுடைய ஆவேசமும் தற்காத்துக்கொள் பவனுடைய வேகத்தை அதிகப்படுத்தும். அ எமர்சன் உயர்ந்தி உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளிப்பது வெற்றியன்று. போராட்டமேயாகும். அ மாண்டெலெம்பெர்ட் நம்முடன் மல்யுத்தம் செய்பவன் நம் நரம்புகளை முறுக்கேற்றி விடுகிறான். நம் திறமைகளைக் கூர்மைப்படுத்துகிறான். நமது எதிரியே நமக்குத் துணைவன். அ பர்க் எதிலும் ஐயம் அதிக அறிவிருந்தால் அதிக நம்பிக்கை இருக்கும் அறியாமைக்கு எப்பொழுதும் ஐயந்தான். அ வில்மாட் சில மனிதர்கள் தாங்கள் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங் களை மட்டுமே நம்புவர் அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வையும் மிகச்சிலவே. அ எவர்மாண்ட் இழிவான இதயத்திற்கும். நலிவடைந்த மூளைக்கும் அறிகுற, எதிலும் ஐயப்படுதல், உண்மையான தத்துவ ஞானம் விஷயங் களை மறுத்துத் தள்ளாமல் விளக்கவே முற்படுகின்றது. அ புல்வர்' எல்லாம் அறிந்தவர் எங்கும் பார்க்கக்கூடிய இறைவனுடைய கண்ணிலிருந்து எது தப்பியிருக்க முடியும்? எது அவன் உள்ளத்தை ஏமாற்ற முடியும்? அவன் எல்லாம் அறிந்தவன். அ மில்டன் உன் செயல்கள் அனைத்திலும் இறைவன் உன்னைக் காண்பதாக எண்ணிக்கொள் அவன் செயல்கள் அனைத் திலும் அவனைக் காண்பதற்கு முயற்சி செய். க. குவார்லஸ்