பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

101




திருக்குற்றாலம்
தென்காசி
6.10.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

வி.எஸ். பழனியப்ப முதலியார் கடிதம் இத்துடன். வி.பி.எஸ் அவர்களுக்கு உடம்பு செளகரியப்பட்டு வருகிறது. ஆகாரம் எல்லாம் திரவமாய் இருந்ததால் ஜீரணசக்தி உறங்கிவிட்டது என்று தெரிகிறது. ஆகையால் ஒரு உருண்டை சாதத்தை புளியாத மோரில் பிசைந்து உட்கொண்டால் வயிற்றிலுள்ள ஜீவசக்தியைக் கிளரும், மெள்ள மெள்ள ஜீரண சக்தியே உண்டாகிவிடும். பிறகு போஷணையை வாங்கிக்கொள்ளும். எல்லாம் பிறகு சரியாய்ப் போய்விடும்.

மாமா இங்கேதான் இருக்கிறார்கள். பாரிவேட்டை பற்றி வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றோடு வேட்டை நின்றுவிட்டது. இனிமேல் ஒரு வருஷத்துக்கு அமைதிதான்.

கம்பர் விழாச் செயலாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

தாங்கள் நாலு மணி (காலை) ஆசாமி ஆதலால் உத்யோக ஜோலி குடும்ப ஜோலி, ஒப்புரவுக்கான ஜோலி, கம்பர் ஜோலி எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. ஜோலி இல்லையே என்றுகூடத் திண்டாடுவீர்கள் போலத் தெரிகிறது.

விழா அபாரமாய் இருக்கும். திருநெல்வேலியை ஒரு புரட்டுப் புரட்டிவிடும். சந்தேகம் இல்லை.

பி. எக்ஸ். ரங்கசாமி நாடார் நேற்று மாலை இங்கு வந்தார். அரை மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருக்க