பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


வாணவெளியில்விண்மீன்களுக்கும் உடுக்குகளுக்கும் கோள் களுக்கும் இயக்கம் உண்டு என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இக்கருத்தை,

  • பதியிற் கலங்கிய மீன்'29 -

-எனத் திருவள்ளுவப்பெருந்தகை குறித்தார். இக்கருத்தை அறிவாராய்ச்சியால் விரித்து, வளர்த்து, நடைமுறையில் காண்போர் தோன்றவில்லை. மேலைநாட்டார் முனைந்து, முயன்று அவ்வியக்கத்தைக்கண்டனர்; இயக்கத்தோடு இயங்கினர்; அதனை வென்றனர்; அவற்றின் மேலேயே இயங்கினர். - உலகம் என்பது நீர், மலை, நிலம் என்றிருந்த அளவில் உயிர் இனங்கள் தோன்றாதிருந்த காலம் உண்டு. பாசி, பூஞ்சான், காளான், புதர், செடி, கொடி, மரம் என்பன உயிர்த்தன; தளிர்த்தன, தழைத்தன. ஆனாலும், உயிரினம் பிறப்பதற்கு வித்தான கருப்பிடிக்கும்-சூல்கொள்ளும் நிலை, பூக்கள் தோன்றிய போதுதான் ஏற்பட்டது. இதுகொண்டு, பூதான் உலகத்து உயிர் இனத் தோற்றத்திற்கு அடித்தளம் என்பதை உணரலாம், இத்தகைய மூலமான பூ பற்றிய அறிவியல், மேலைநாட்டா ரிடம் அரும்பி, மலர்ந்து, மணம் கமழ்ந்தது. நந்தம் தமிழில் காணப்படும் பூக்களின் உறுப்பு, தன்மை, இனப் பருவம் பற்றிய சொற்கள் அறிவியல் பாங்குடையவை. என்றாலும் அறிவியல் துறையாக விளங்குவது மேலைநாடு என்பதில் ஐயமில்லை. கி. பி. முதல் நூற்றாண்டில் மூத்த பிளினி என்னும் உரோமப் பேரறிஞன் இயற்கையை ஆராய்ந்தான். செடியியலைத் துருவினான். இயற்கை அறிவியல்' என்னும் நூலை வழங்கினான். இப்பேரறிஞனைத் தொடர்ந்து பலரால் இக்கலை இடையீடு களுடன் வளர்ந்தது, - 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுவீடன் நாட்டுப் பாதிரியார் இலின்னேயசு மாண்டலே’ என்பார் செடியியல் ஆய்வை மேற்கொண்டார். இவர் செயற்கை முறை அறிஞர் எனப் பட்டார். உயிரியல் ஆய்வில் இவர் டார்வினுக்கு அடுத்த நிலை யில் இடம் பெற்றவராவார். - இவர் பட்டாணி, அந்திமல்லிகைப் பூக்களைத் தமது ஆய்வுக்குக் கொண்டார். அந்திமல்லிகையின் சிவப்பு வண்ணமும் 29 குறள் : 1118.