பக்கம்:உத்திராயணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் I Ø ፩

அக்கா இங்கே படுத்துக்கப்போறா-’’ நானும் அக்காவோடு படுத்துப்பேன்-’’ ஒரே கொல்’ !

சொன்னாலும் சொன்னையே அப்படிச் சொல்லு-’’ கையை முஷ்டித்துக்கொண்டு ஆட்டினேன். * ஆமாம் அப்படித்தான்.""

அந்த ரெண்டுங்கெட்டானோட என்னடி பேச்சு. செல்லக் கேடே நாச்சியாரேன்னு இருக்கு அதுவும்-"

நிஜம்மாவே கவலை வந்துடுத்து. அக்காவை விட்டு ஒரு நாள் கூடப் பிரியாமல் இருந்துட்டு, இன்னிக்கு என்னமோ இவாள்ளாம் புதுசாக் கிளப்பறாளே!

கூடத்தில் ஒரு பக்கம் பந்தி மறுபக்கம் கச்சேரி நடந் துண்டிருக்கு. அக்காவும் மாப்பிள்ளையும் சோபாவுலே உக்காந்துண்டு இந்த லோகத்து சிந்தனையே இல்லாமல் அப்படி இழைஞ்சுண்டிருக்கா எனக்கு அழுகையே வந்து டுத்து. இப்படி ஒரு அக்ரமமா?

மணவறைக் கதவு, தொட்டதும் திறந்துக்கறது. தாளிட மறந்துட்டா. நானும் சத்தம் போடாமல் உள்ளே நுழையறேன். உள்ளே வெளிச்சம் திகுதிகுன்னு எரியறது. முழு அலங்காரமும் அப்போத்தான் முடிஞ்சிருக்கு. சுவத் திலே ரெண்டு மூணு படங்கள் புதுசா வந்திருக்கு ஐயே! பிடிக்கல்லே! படுக்கையில் பூக்கள் வேணும்னு சிதறிக்கிடக்கு. கட்டில் பக்கத்தில் டீப்பாய்மேல் வெள்ளிக் கூஜாவை துணியில் மணிதைத்து எம்பிராய்டரி' கவர் மூடியிருக்கு. திறந்து பார்த்தால், சேறாட்டம் பால், சாரைப் பருப்பு. குங்குமப்பூ மிதக்கிறது. பக்கத்துலே, கண்ணாடித் தட்டில் அடுக்கடுக்கா மைசூர்ப்பாகு. பால் பர்பி, பாதுவு:ா, குலோப் ஜாமுன், விஜிடபிள் சோமாசி, மங்கு மங்குனு அஞ்சு பந்து, திரட்டுப்பால்-ஐயோ! திரட்டுப்பால்னா நேக்கு உசிராச்சே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/113&oldid=544202" இலிருந்து மீள்விக்கப்பட்டது