பக்கம்:உத்திராயணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 லா. ச. ராமாமிருதம்

நாக்கைத் தொட்டு பென்சில் கோட்டை அழிச்ச மாதிரி,

நினைவுகள் மங்கித் தெரியறது.

岑 率 岑

அக்கா டிரஸ் பண்ணிண்டிருக்காள். கண்ணாடி எதிரே நிக்கறா நினைச்சு நினைச்சுப் பவுடரை முகத்தில் அப்பிக் கிறா. உடனே துடைக்கிறா. தோள்பட்டையில் மேலாக்கை அலை அலையாச் சீண்டிக்கிறா. அக்காவுக்கு அப்படி யொண்னு:ம் வயசாயிடல்லே. ஆனால் அவளை இன்னிக்குப் பொண் பார்க்க வரா. {எல்லாம் காலா காலத்துலேநாங்கள் கண் மூடறத்துக்கு முன்னால்-பெரியவா பேச்சு) ஆறு மணிக்கு வேளை பார்த்திருக்கு. ஆனால் மூணு மணி யிலிருந்து தியிலோகப்படறது. அக்கா மத்தியானம் காலேஜுக்கு மட்டம் அடிச்சுட்டா. அப்போலேருந்து கண்ணாடியிலே தன்னை இன்னும் தேடிண்டிருக்கா. இந்தப் பேச்சு புரியலேதான், ஆனால் பெரியவா சொல்லிக் கொடுத்ததுதான். நானும் ஸ்கூலுக்கு டோக்கர் கொடுத் துட்டேன். ஏண்டிம்மா நீ போகல்லேனா நான் மட்டும் போகனுமோ?

பந்தைச் சுவத்தில் எறிஞ்சு எறிஞ்சு புடிச்சுண்டிருக் கேன் இருபத்தஞ்சு கேம் எடுத்துட்டேன்.

வலந்தீ வாயேன்! காப்பி ஆறிப்போறது!

நி

வேலையாய் இருக்கேன் அம்மா! இப்போ வரமுடியாது போ :

நான் மட்டும் இங்கே ஈ ஒட்டிண்டிருக்கேனா?"

அக்கா பதில் பேசவில்லை. பேசமாட்டாள். ஒரு தடவை பேசியாச்சு. அவ்வளவுதான். அக்கா கண்ணாடியை முறைச் சாள். நெற்றியில் வேர்வை முத்திட்டது. இமையோரம் மை, ஈட்டி மாதிரி கூர்ப்பா குத்திண்டு வரணும்னு பார்க் கறா இன்னும் சரியா வரல்லே. இப்படியே இன்னும் கொஞ்சநாழி நின்னான்னா முழு மேக்கப்பும் வழிஞ்சோட ஆரம்பிச்சுடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/106&oldid=544195" இலிருந்து மீள்விக்கப்பட்டது