பக்கம்:உத்திராயணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互52 லா, ச. ராமாமிருதம்

ராமா ராமா ராமா!

காதைப் பொத்திண்டால் ஆயிடுத்தா...? செவி ஜவ்வில் வார்த்தைகள் ஒட்டிக்கொண்டு கழல முடியாமல் தும்பி யடிச்சுக்கறதே!

ஊரை விட்டே மாத்திண்டு ஓடி வந்துட்டால் ஆயிடுத்தா? எங்கே போனால் வயிற்றில் கூடவே சுமக்கும் அஸ்திப் பானையை என்ன செய்யறது? உள்ளே தணல் திடீர் திடீர் பகிர் பகிர்-வயிறு சுட்ட மண்ணா மாறிடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு எந்த முன்னோர் வழிப் புண்ணியமோ, மறு படியும் எப்படி ஈரம் கண்டு கசிஞ்சுதோ? பூச்சி வெச்சு சாமாவும் பிறந்து ஆளும் ஆயிட்டான். ஆயுசோடு இருக் கனும்: .

கமலி, கடைசியா கேக்கறேன்... இது எத்தனாவது கடைசியோ?... நீ பறிபோனையா, துரோகம் பண்ணி னையா? ஆனால் நீ எப்படி பதில் சொல்லுவே? பேசா மடந்தையா, புரியாத புதிரா சாகாவரம் வாங்கிண்டு என் தொண்டையில் மாட்டிண்ட மயிராய் சுத்திச் சுத திவரே ! கடைசியா நானும் உனக்கு ஒண்னு சொல்றேன். போன கையோடு மானம் பேரிசா, உன் கையாலோ பிறர் கையாலோ நீ செத் திருந்தால் நிம்மதி. இல்லே, இன்னும் உசிரோடு இருக்கேன்னா, குடிசையில் வாழறையோ, மாடியில் அட்டம் செலுத்தறையோ, எங்கிருந்தாலும் சரி நல்லபடியா, செளக்கியமாயிருந்தால் சரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/162&oldid=544250" இலிருந்து மீள்விக்கப்பட்டது