பக்கம்:உத்திராயணம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரபாணம் H 25

தால் இப்போக் கூட வலிக்கிறது (அதுவும் ஏதோ சினிமாக் காrதான்.) தலைமயிரைப் பிய்த்துக்கொள்கிறாள். நெற்றிப் பொட்டில் அறைந்துகொள்கிறாள்.

நான் அலண்டுதான் போனேன். இதென்ன ஆஸ்பத்திரி கேஸா? ஏதாவது மறைச்சுவெச்சு என் தலையில் கட்டி விட்டார்களா?

என்ன கஸ்தூரி இதென்ன கோலம்?"

இருக்கிற கஷ்டம் போதாதுன்னு நீங்களே என்னை வாழவெக்க மாட்டேன்கறேளே?'

என்ன உளர்றே? உன்னை யார் வாழ வைக்கவில்லை? எந்த மாமியாருக்குத் தவறாமல் பலகாரத்துக்கு தினம் தோசைக்கு அரைத்துப் போடுகிறாய்?' எந்த குண்டுனி நாத்தனாருக்கு தலை பின்னி உனக்குக் கை ஒஞ்சு போறது? எந்த மச்சினனுக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரம் தப்பாமல் சமைத்துப் போடுகிறாய்'

அதெல்லாம் கூட வேணுமா? இன்னும் பத்து மாதத் தில் நான் உருக்குலைஞ்சு, கையில் ஒண்ணை ஏந்திண்டு அது உதிரத்தை உறிஞ்சற வேகத்தில், கன்னம் ஒட்டி, அழகும் பொலிவும் இழந்து, பல்லும் பவிஷ-மாய் கிழவியா என்னைப் பாத்துடுவேள். உங்களுக்குத் திருப்திதானே! அதுக்குள் என்ன அவசரம் உங்களுக்கு?’’

நான் ஒன்றும் பேசவில்லை.

அப்போதே எங்கள் பேச்சு அனேகமாக அறுந்து போயிற்று.

பிள்ளைப்பேறுக்குப் பிறந்தகம் போனவள் ஆறு மாதம் எட்டு மாதம், பத்து மாதம்..... வருடமாகப் போகிறது, திரும்பவேயில்லை. கடிதாசுகளில் ஏதேதோ சாக்கும். போக்கு :

கடிதங்களும் நின்றுவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/135&oldid=544224" இலிருந்து மீள்விக்கப்பட்டது