பக்கம்:உத்திராயணம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடிக்கொண்டே இரு !

ஆனால் இருவருமே சொல்லி வைத்தாற்போல் சற்று நேரம் அடங்கினர்.

இதுவரை நின்றுகொண்டிருந்த இடத்தில் ஸ்-ரேஷ் அப்படியே குந்திட்டு உட்கார்ந்து முழங்காலைக் கட்டிக் கொண்டான்.

இடத்தின் அமைதி இருவரையும் தன் தம்பூரில் இழைத்துக் கொண்டது.

என்னைப் பார், என்னைக் கேள் என்கிற மாதிரி. கண் உள்ளவர் என்னைப் பார்க்கட்டும். கண் இல்லாதவர் என்னைக் கேட்கட்டும். அதுவும் இல்லாதவர் அவர்மேல் நான் படர்வதில், என் தழுவலில் என்னை உணரட்டும்-என்கிற மாதிரி.

என் வேர், கண், மூக்கு, செவி, பாஷை இன்னும் எது எதையோ தாண்டி ஒடுகிறது.

அதனால் எல்லோரும் என் குழந்தைகள் என்கிற மாதிரி. என் குழந்தைகளா! சற்று நேரம் சும்மாயிருந்து பாருங் கள். இதுதான் என் பாஷை, உங்களுக்கும் புரிந்த பாஷை என்கிற மாதிரி.

அவர்களை வாய் பொத்தியது எது என்று அறியாமலே இருவரும் மெளனமாயிருந்தனர்.

காற்று என்ன ஷோக்காய்க் கிளம்புது! காற்றும் ஒரு தோழன்தான். எப்படிக் கண் இமையிலே கன்னத்துலே உடல் ரோமத்துலே, மண்டை மயிர்க்காலுக்குள்ளே புகுந்து விளையாடுது! கிச்சாங்கிளுகிளு குஸ்ஸுமாங்கனி பஹ” துல்லா-என்னமோ இப்படி உளறத் தோணுது. நெஞ்சிலே கன்னுக்குட்டி துள்ளுது.

  • -ஏய் அதோ பச்சைக்கிளி ரெண்டு.! உன் தலைக்கு மேலே மரத்துலே, கிளையிலே...”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/81&oldid=544170" இலிருந்து மீள்விக்கப்பட்டது