பக்கம்:உத்திராயணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஹாதி

கு.பிரென்று தாழம்பூ மணம் அறையைத் துரக்கிற்று. நள்ளிரவில் யோசனையின் அரை மயக்கத்திலிருந்து-என் வயதில் எதைத் தூக்கம் என்று சொல்வது? ஆயிரம் கவலை நானாக விலைக்கு வாங்கிக்கொண்டது, பிறர் எனக்குத் தந்து அதற்கும் பழி என்மேல் சுமத்துவது... கொடுத்த கடன் கள் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்டுகின்றன.

(கொடுக்க மாட்டேன்னா சொல்லுறேன்? வாங்கினதை இல்லேன்னா நாக்குப் புழுத்துப் போயிடும். ஆனால் நீங்கள் கொஞ்சம் பொறுக்கணும். எப்போன்னு கேட்டால் எப்படிச் சொல்லுவது? காலம் போற போக்கு உங்களுக்குத் தெரியா தில்லே. பொண்ணுக்குப் போன மாதம் ஆபட்ஸ்பரியில் பூப்பு கொண்டாடினேன். அழைப்பு வந்திருக்குமே. பார்த் தீங்களா? ஒண்ணே அடக்கம் ரூ. மூணு ஆவுது. ஊரே திரண்டு வந்தது, ஷேக் சின்னமெளலானா வெச்சிருந்தேன். சாமிதான் வரல்லே. சாமிக்குக் கோவம், ஒண்னு வெச்சுக்கங்க. ஒங்களது செல்லிக்காசு ஒண்ணு போவாது. கொஞ்சம் முன்னே பின்னே! அவ்வளவுதான்.'

அவனுக்குப் பூப்புக்கு அழைப்பு ஒண்னு ரூ. 3|-எனக்கு அரிசிக்காரனுக்கும், பால்காரனுக்கும் நாளை சால்ஜாப்பு சொல்வியாகணும். இவன் வட்டியை அளக்கவே இவ்வளவு பேச்சு. முதல், முள்மேல் போட்ட துணி, அம்மா, உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/85&oldid=544174" இலிருந்து மீள்விக்கப்பட்டது