பக்கம்:உத்திராயணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலி ஆடு 51

வதுபோலவும், "எங்கே பார்க்கலாம்! நீ எப்படி ஆடறேன்னு புலியை நகத்திக் காமி உனக்கு ஆடத் தெரியுதான்னு பார்க்கிறேன்!” என்று வெகு அலகதியமாகச் சொன்னான்.

ஆனால் அவளா ஏமாறுகிறவள்? இல்லேங்க, பரவா பிலலே, எனக்கு ஆடறத்துக்கு நல்லாத் தெரியுங்க. ஒங்க ளுக்கு ஆடிக் காண்பிச்சு நான் கத்துக்க வேண்டியதில் லேங்க..." என்று வெகு மரியாதையாய்ப் பதிலளித்து விட்டாள்.

மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான். அவன் எண்ணம் பவிக்கவில்லையென்று கண்டதும், அவனுக்குக் குழப்பமும் லஜ்ஜையும் அதிகமாய்விட்டது. அத்துடன் அசடுக்கு அகங்காரம்' என்கிற மாதிரி, கோபமும் ஜனிக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் அக்கோபத்தின் காரணம், அல்லது காரணமின்மை இரண்டும், அவனுக்கு வி. க்கவில்லை, உ. ம்பில்கூட குறுகுறுவென்று ஒரு உணர்ச்சி ஆரம்பித்து விட்டது. உள்ளே, எலி பிராண்டுவதுபோல் இருந்தது.

புவியை நகர்த்தறது எப்படி?" அவன் குரல் முன் போல் சாதுவாயில்லாமல், முரட்டுத்தனமாய்விட்டது.

இரு அவசரப்படாதே." அவள் வெகு சாவதான மாய் குறுக்கு விசாரணை செய்யும் வக்கீல் மாதிரி கண்டிப் பாய், அப்படியானால், நீ தோத்துப் பூட்டேன்னு ஒப்புக் கறயா?”

அவனுக்கு வேதனை அதிகமாய்விட்டது. தாங்கவே முடியவில்லை. ' என்ன நான் சொல்றது ஒனக்குக் கேக் கல்லே? புலியை எப்படி நகத்தறது?’’

அவன் குரலின் கர்ண கடூரமான த்வனி அப்பொழுது தான் அவள் உள்ளத்தில் தைத்தது. அவளுக்கு உண்டான கோபத்தில் உடம்பு சிலிர்ந்தது. ஒஹோ அப்படியா சமாசாரம்?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/61&oldid=544150" இலிருந்து மீள்விக்கப்பட்டது