பக்கம்:உத்திராயணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வா. ச. ராமாமிருதம்

இரண்டுங்கெட்டானாய் அவன் மாட்டிக்கொண்டு விட் டான். திருப்பித் திருப்பி, புத்தியைச் செருப்பாலே அடிக்கணும்' என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான். அவனுக்குள், தான் இவ்வாட்டத்தில் மிகவும் கெட்டிக்காரன் என்று அபிப்பிராயம். அவனேதான் அவளை ஆட்டம் போடக் கூப்பிட்டது. முதலில் ஆடுகளைத் தான் விளை யாடுவதாகச் சொன்னான். ஆனால் அவள் ஒரே பிடியாய், தான் ஆடாயிருக்கணும் என்று குதித்தாள். கடைசியில் புலி ஆடுவதிலேயே, அவன் பாடு தகராறாய்விட்டது.

திருப்பித் திருப்பி கடைக் கண்ணால் அவளைத் திருட்டுப் பார்வை பார்த்து விழித்துக் கொண்டிருந்தான்.

சாதே, இன்னும் எம்மாத்தம் நாழியாக்கப் போறே? இன்னும் பல்லே கழுவி ஆவல்லே, செத்தை வாரியாவல்லே, பொழுதோ சாஞ்சூட்டுது, சாணி தெளிக்கணும், மந்தை வர நேரமாச்சு, மத்தவங்களுக்கெல்லாம் வேறே வேலே யில்லைபோலே இருக்குது, நீ குந்திகிட்டு யோசனை பண்றத்தே பாத்தா...?’’ என்று சிரித்தவண்ணம் அதட்டினாள் .

அவனுக்கு உடம்பெல்லாம் முள் தைப்பதுபோல் இருந்தது. கொழுப்பு கொஞ்சமாயில்லை குட்டிக்கு!' என்று பல்லைக் கடித்தான். ஆனால் அவன் என்ன முக்குச் சக்கரம் போட்டுப் பார்த்தும், அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. ஆட்டத்தில் தோற்றுவிட்டதாக அவ ளிடம் ஒப்புக்கொள்வது கனவிலும் நினைக்க முடியாத விஷயம். ஏனெனில் அவன் ஆண்மகன்! ஆகையால் ஆடும் வழியை, நயமாக அவளிடமிருந்து தெரிந்துகொள்வதுதான் சரியான வழி.

ஊஹாசம், பிரயோசனமில்லை.

தலையை உதறிக்கொண்டு நிமிர்ந்தான். ஏதோ தனக்கு சிரத்தையில்லாதது போலவும், அவளுக்குத் தயவு பண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/60&oldid=544149" இலிருந்து மீள்விக்கப்பட்டது