பக்கம்:உத்திராயணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் l 13

திறந்தேன். அக்கா முகம் சுண்ணாம்பாய் வெளுத் திருந்தது. கையில் தந்தி, பிடுங்கினேன்.

மதர் ஃபெல் அக்ஸிடெண்ட்-nரியஸ் ஸ்டார்ட் இமீடியட்லி.

அக்கா கூடத்தில் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சாள்.

எனக்கும் திக்பிரமை பிடித்தாற்போல் ஆகிவிட்டது. அக்கா என தோளைப் பிடித்து உலுக்கினாள் :

ஜனனி ஏதேனும் பேசேண்டி என்னடி ஆயிருக்கும்?" என்ன வாவது ஆயிருக்குமோ? என்னடி பண்றது? தொண்டைக் கீச்சில் இழுத்துக்கொண்டே போயிற்று.

ஸ்டாப் இட். கத்தினேன். என்னடி செய்யலாம்?"

கிளம்ப வேண்டியதுதான். எப்படி? அத்திம்பேருக்குப் போன் பண்ணலாம்னா இங்க கிட்டே போன் கிடையாது. ஆபீஸ் இங்கிருந்து 20 கி.மீ. ஸ்கூட்டரில் போய்வருகிறார். இன்னும் ரெண்டுமணி நேரம்தான் இருக்கு ரயிலுக்கு இதை விட்டால் அடுத்தது மறுநாள் இதே நேரத்துக்குத்தான். அதற்குள் என்னவோ? ஏதோ கடைசியில் இன்னிக்குக் கிளம்பி நான் முன்னால் போறது, மறுவண்டிலே அக்கா அவசியமானால் அத்திம்பேர்-ஊரும் வீடும் இருக்கும் அவந்தரைக்கு எல்லோரும் பூட்டிக்கொண்டுகிளம்ப முடி யாது-என்று முடிவாச்சு.

பாவம், எங்கிருந்தோ இந்த நேரத்துக்கு ஒரு ஜட்கா வைப் பிடிச்சுண்டு வந்தாள். அத்வானம் பிடிச்ச ஊர். கூட வந்து அவள் தான் ரயில் ஏற்றினாள். வண்டியைப் பிடிச்சதும் சினிமா சேஸ் மாதிரிதான். ஸ்டேஷன் மாஸ்டர் பெரிய மனசு பண்ணினார். ஆ, புவர் சைல்ட் டொண்ட் வொரி, காட் ஈஸ் கிரேட்.’’ என்று தைரியம்கூடச் சொன்னார்.

உ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/123&oldid=544212" இலிருந்து மீள்விக்கப்பட்டது