பக்கம்:உத்திராயணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 95 லா. ச. ராமாமிருதம்

நான் பதில் பேசல்லே. நெனச்சுண்டேன்.

ః 亲 岑

ஏன்னா?’ ’

என்ன?’’

கடிதாசிலே ஏதேனும் தெரியறதா?”

என்ன தெரியணும்?"

ஏதேனும் பொறி வெச்சிருக்காமா?’’

அப்பா கடிதாசை உதர்றார்.

கடிதாசி பொசுங்கினமாதிரி தெரியல்வியே!”

இந்த இடக்கில் ஒண்ணும் குறைச்சலில்லே. வருஷம் அஞ்சாறது. அவாளும் இந்தப் பக்கம் திரும்பிப் பார்க் கல்லே. யார்மேல் குத்தமாயிருக்கும்?’’

பழிபோட தலைதேட ஆரம்பிச்சுட்டியா? நாட்டு நடப்பு தாம் படறது போதாதா? விட்டேத்தியாத்தான் இருந் துட்டுப் போறா."

அப்படி உண்டா என்ன?”

ஆமாம், அப்படித்தான் போ!'

அம்மா ஏதோ முனகுகிறாள்.

家 冰 :};

ஆனால் இந்த ஐந்து வருடங்களில் என்னில் எவ்வளவு மாறுதல் ! நான் முல்லைக் கொடியல்ல. ஆனால் உடல் உருவி வடிந்துவிட்டது. பிசிர்கள் மறைந்து எப்படி, எங் கெங்கே நிரவிக்கொண்டன? ஏதோ புனித நீரில் மூழ்கி, சாபம் தவிர்ந்து, சுயரூபத்தில் எழுந்தவள்போல், இளமை பின் செழிப்புடன் அழகின் மெருகேறி...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/116&oldid=544205" இலிருந்து மீள்விக்கப்பட்டது