பக்கம்:உத்திராயணம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 வா. ச. ராமாமிருதம் அந்தத் தந்தியைக் கிழித்தெறிய அவனுக்குத் தைரியம் இல்லை. விஷயத்தை என்றேனும் அவிழ்த்துவிட நேர்ந்தால் அதுதானே சாயிக்கு வர வேண்டும். அவன் எங்கு போனாலும் கூடவே அதுவும் சென்றது. எங்கேனும் அசதி மறதியாக வைத்துவிட்டால், கீரைக்காரிக்குச் சில்லரைக்காக செல்லம் harger இல் தொங்கும் pant pocket இல் கைவிட்டு அங்கு அது அவள் கையைக் கடித்துவிட்டால்-- " என்னடா ஸேது, வீட்டுக்குள்ளே கூட. சொக்காயைக் கழட்டமாட்டேன்கறே? என்ன தான் உனக்கு உடம்பு? மூகமே சரியாயில்லையோ ப அவருக்குப் புதுசா அர்ச்சுன மச்சம் உண்டாயிருக்கு.. அதான் யாருக்கும் காட்டமாட்டார். ப என்னடா செல்லம் சொல்றாள், எனக்கு ஒண்ணும் புரியல்லியே!" | கதா காலக்ஷேபம்னு அம்மா போவதில் குறைச்சு' லில்லை. ஆனால் யார் கதை கேட்கப்போறா? அம்மாவுக்கு நாளுக்கு நாள் சோபனங்களுக்கு அழைப் புக்குக் குறைவே கிடையாது. நாளுக்கு நாள் அம்மாவுக்குக் களையும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அணையும் முன் கொழுந்து, அவள் கழுத்துக்கு, உலைக்கு. அந்தத் தேஜஸ்ஸே அத்தாணி 3யா? ஒருவரும் தன்னைச் சுற்றி மில்லாத சமயத்தில் காத்திருந்தாற்போல் அவனையறியா மலே விக்கி விக்கி அழுகை வரும். ராமா யார் கண்ணுக்கும் தெரியாமல் தனக்கு மட்டும் படும், இந்தத் தோள்மேல் குரங்கு சவாரி தாங்கமுடியவில்லை. Electric traia?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/150&oldid=1279503" இலிருந்து மீள்விக்கப்பட்டது