பக்கம்:உத்திராயணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宣罗伊 லா , ராமாமிருதம்

இதைத் தவிர ஆள் ஏமாந்தா, பையன் அசப்பாயிருந்தால் எத்தனை பிஸ்கட் திருடுதுங்க தெரியுமா? பன்னை எடுத்துக் கேஸ் கண்ணாடி மேலே வெச்சுப் பொட்டலங் கட்ட பேப்ப ருக்குக் குனியறதுக்குள் முழுசா அப்படியே துக்கிடுதுங்க. உலகத்தில் துரோகம் என்னென்ன விதத்தில் நடக்குது தெரியுங்களா? - டாக்டர் எனக்கென்ன உடம்பு

உங்களுக்கு ஜன்னி கண்டிருக்கிறது.'

ஜன்னி?” பெரிய நீண்ட சிறகின் நிழல், சுவரில் இளவெயிலின் விதிர் விதிர்ப்பைக் கலைத்தது.

இது காகமல்ல.

'ஜன்னியில் எத்தனையோ விதம். நினைவு தப்பணும்னு அவசியமில்லை. வண்டி Top gear-இல் சரிவில் ஓடிண்டிருக்கு. Sir, நீங்கள் என்னோடு வாங்க கார்லே

تہذا

பையன் இன்னும் வரல்லியே!”

“Don’t be siliy man! You are in a fine mess”— இதெப்படி நேர்ந்தது? இவ்வளவு மோசமா!-நானும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். எப்படியிருக்கலாம்? முந்தா நேற்று உடம்பு சுட்ட மாதிரி இருந்தது. பொருட்படுத் தாமல் பச்சைத் தண்ணிரில் வழக்கம்போல ஸ்நானம். அன்னி ராத்திரிகூட சுட்டதோ? உடம்பு வலி. அதைப் பார்த்தால் முடியுமா? விடியாத காலை எழுந்து வழக்கம் போல அலுவல்கள்-ஸ்நானம். சேகர், 7-55க்கு உட் கார்ந்துவிடுகிறான். கையில் வேறு கட்டிக் கொடுக்கணும். ஆனது போதுமப்பா' என்று அவன் சொன்னாலும் மனசு கேட்கிறதா? இரவு எட்டு மணிக்குத்தான் அவனை மறுபடி பார்க்கலாம்? ஒவ்வொரு நாள் Night duty என்று அப்படியே தங்கிவிடுவான். புடலங்காய் பொரித்த குழம்பு அவனுக்கு ரொம்ப இஷ்டமாச்சே என்று எடுத்து வைத்ததை நானே சாப்பிட நேர்கையில், தொண்டையில் வில்லுண்டையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/130&oldid=544219" இலிருந்து மீள்விக்கப்பட்டது