பக்கம்:உத்திராயணம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் # 09

அக்கான்னா அக்காதான்... அக்காவுக்கு என்மேலே உசிர்தான், அஞ்சு வருடம் பிரிஞ்சிருந் திருக்கோம். அந்தப் பக்கம் அத்திம்பேர்-மயிருக்கு மிஞ்சின கறுப்புமில்லை. மச்சினிக்கு மிஞ்சின உறவுமில்லை. பிரியத்துக்கும் உபசாரத் துக்குக் கேக்கனுமா? புதிதாகப் பேசுவதற்கும் பழைய நினைப்புகளைத் திருப்பிப் புரட்டவும் இந்த அஞ்சு வருடங் களில் எவ்வளவு சேர்ந்திருக்கும். அக்காவின் மனவரையி என்னுடைய அட்வெஞ்சர் இப்போது எவ்வளவு பெரிய, சிரிப்பு: வாழ்க்கையிலே ஒரு நீண்ட சிரிப்பு என்கிற எடையை அடையும்வரை நமக்குத்தான் ஆயுசு இல்லை,

இவாள் குவார்டர்ஸில் இருக்கா. அண்டை வீடா னாலும் சரி, மாடியானாலும் சரி குடித்தனக்காரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கல் மோக்கல் இல்லை. தவிர தெற் கத்திப் பக்கத்திலிருந்து வந்தவாளைக் கண்டாலே லாடு வாலான்னு ஒரு இளப்பம் உள் பகை மொத்தத்தில் ஒட்டுதல் கிடையாது.

இரண்டு இந்தி சினிமா பார்க்கலாம். நாலு நாளில் புதுமை தீர்ந்ததும் அக்காவும் அத் திம்பேரும் எப்படி இங்கே ஒட்டுகிறார்களோ? நீயும் நானும்டி, எதிரும் புதிரு மடி ன்னு.

மாற்றி மாற்றி ஆலு ஆட்டாதான். டிக்கி, பாஜி, சப்பாத்தி, பூரி, சமோஸா, இதையே மாற்றி மாற்றி சாப் டாடாய் வாசி: டிபனாப் பார்த்துக்கொள்.

இந்த மண்ணுக்கு உருப்படியா தாய்கறி ஒன்றும் வராது போலிருக்கிறது. ஏதேதோ கிள்ளிச் செடிகள், க்ரோட் டன்ஸ், மல்லி இன்னும் ஒன்றிரண்டு வாசனைப் புஷ்பங்கள். பயிர் போட்டுப் பராமரிக்கவும் பயம்-பாம்பு நடமாட்டம்

அதிகமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/119&oldid=544208" இலிருந்து மீள்விக்கப்பட்டது