பக்கம்:உத்திராயணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் 复酸*

ஜனனியா? ஜனனிதானா இது?

தெரிந்தவர். தெரியாதவர் திருட்டுத்தனமாக திரும்பின் பார்க்கையில் விழியாலேயே விழுங்கப் பார்க்கையில் அதில் ஒரு திருட்டு ருசி, பெருமிதம் கானத்தான் செய்கிறது.

பள்ளியிலிருந்து திரும்ப ஒரு பத்து நிமிஷம் முன்னே பின்னே ஆனால், அம்மா வாசலில் பதறி நின்றுவிடுகிறாள். வேளியில் போகும்போதெல்லாம் விபூதியால் நெற்றியில் லேசாகத் தீட்டுகிறாள். சிவராஜ குருக்களின் யாகப்பிர சாதம், சர்வத்துக்கும் ரட்சை!” என்னைச் சுற்றி சுவர்களை எழுப்புகிறாள். நெருக்குகிறாள். அப்பாவும் அவளுடன் சேர்ந்துவிடுகிறார்.

ஜனணி: தங்க வளையங்கள் உன் காதுக்குப் பொருத்த மாத்தானிருக்கு. ஆனால் இசைகேடா நடுவழியில் காட் டிண்டே-எடுக்கறவன் வளையத்தை இழுக்கிறப்போ காது அறவும் வழியிருக்கு. தோடு, கம்மல்னா அவ்வளவு சுலப மில்லை.

ஜனனி பிறந்த நாளைக்கு டாலர் செயின் வாங்கிக் கொடுத்தேன். வாஸ்தவந்தான். ஆனால் மேலாக்குக்கு வெளியே ஏன் இழுத்து விட்டுக்கறே? உள்ளடங்கி இருக்க முடியாதா?’’

ஏம்பா, டாலர் பின்னே எப்படி வெளியே தெரியறது, மறைச்சுக்கவா கொடுத்தேள்?’’

எடுக்கறவனுக்கு இந்தா, இந்தா, இதோ இதோ"

என்கிறதுக்கு வாங்கிக் கொடுத்தேனா?’’

பின்னே ஆல்ட்பெர்ட்டா சிலுவை தெரியத் தானே செயினை வெளியில் விட்டுண்டிருக்காள்?’’

ஜனனி உன்னோடு பேசி மாளாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/117&oldid=544206" இலிருந்து மீள்விக்கப்பட்டது