பக்கம்:உத்திராயணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் 登 。

本 率 率

முதலில் அக்கா, அடுத்து பூரீதர், -ரமேஷ்

அப்புறம் நீண்ட இடைவேளைக்குப்பின் நான். கஷ்கு முஷ்கு குண்டச்சி.

அண்ணா செல்லமா வயத்தில் குத்துவான். 'வுண்"னுனு: கை எகிறும்.

அக்கா என்னை தூக்கி வெச்சிக்க ஆசைப்படுவாள். முடியற காரியமா? அவளோ நோஞ்சான். என்னைக் கீழே போட்டுக்கொண்டு தானும் என்மேல் விழுவாள். வீல் என்று அலறுவேன். பாதிது பயம்தான்.

பூரீதர் கண்ணாடியில் வகிடு எடுத்துக்கொண்டே "பூசணி விரிஞ்சுதா பார்! சரி இன்னிக்கு அவியலுக்காச்சு. ’’

'எனக்கு பொறிச்ச கூட்டுத்தான் பிடிக்கும்.'

ரமேஷ் அன்றைய டைம்டேபிள் புத்தகங்களைப் பையுள் திணித்துக் கொண்டிருக்கிறான்.

சஆமாம், அம்மா பண்ற அவியலில் பூசணிதான் மெயின். வேறு தான் ஏது?’’

லங்கணி குரலைப் பாரு! கோடையிடி அங்கம்மா!'

அம்மா காதிலேயே வாங்கிக்கமாட்டாள், காலை யில்லை மாலையில்லை. வேளையில்லை, பொழுதில்லை. காலை நீட்டிக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருப் பாள், சூழ பழைய குண்டுசி, பேசும் படம், பிலிமாலயா, சினிமா பாட்டுப் புத்தகங்கள் வாரியிறைந்து கிடக்க, அதன் நடுவே அம்மா-அதிலே ஏதோ ஒரு குவி, அவள் வேண்டிய தெல்லாம் நிறைஞ்சிருக்கிற மாதிரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/105&oldid=544194" இலிருந்து மீள்விக்கப்பட்டது