பக்கம்:உத்திராயணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலா 9岛

ஹாம்-இது வைதேஹிதான், ஆனால் திடீரென நேத் திக்கு இன்னிக்கு எப்படி இவ்வளவு வளர்த்தி எல்லாமே ஏதேதோ மாறியிருக்கு. கோபாலன், கலியாணம், கோமதி, சீனு இவாள்ளாம் எங்கே வீடே. ஏதோ வெறிச்சோன்னு -இது யாரோ பெண் புடவையைப் பிழிஞ்சு முறுக்கித் தோளில் போட்டுண்டு ஸ்வாதீனமா உள்ளேயிருந்து பேரா. பார்த்த முகமாயில்லே-வாசற்படியில் கொழ, கொழன்னு ஒரு குழந்தை எச்சிலைக் கொப்புளிச்சு விளையாடிண் டிருக்கு: அகிலாவைக் கேட்டால்தான் தெரியும். அகிலா

எங்கே? ஏ. அகிலா: அகிலா!'

பூஜையறையில், இரண்டு வெள்ளி அகல்களுக்கிடையே, மாலையிட்ட ஒரு பெரிய போட்டோவிலிருந்து அகிலா அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/103&oldid=544192" இலிருந்து மீள்விக்கப்பட்டது