பக்கம்:உத்திராயணம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亚岛岛 லா. ச. ராமாமிருதம்

யில் குடல அறுந்து குற்றுயிராய்க் கிடந்தாயோ, எந்தக் கட் டெறும்புச்சாரி, உன் உடல் மேலேயும் உள்ளேயும் புகுந்து மொய்த்ததோ?

'சேதுராமன்!” புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே சென்றான்...

நாட்கள் ஊர்கின்றன.

அப்பாவுக்கு அத்தனையும் வேனும் என்று தோன்றிய வேகத்தை நாளாக ஆகக் கடைப்பிடிக்க முடியவில்லை.

அந்தக் குத்து மீசைக்கிடையில், தேங்காயுடைத்தாற் போன்று , சிரிப்பில், புன்சிரிப்பில், வெளிப்படும் அந்தப் பல் வரிசை, அந்தத் தாடையிறுக்கம், நூல்கட்டிய ஜியோமிதிக் கோடின் துயசரிவில் அந்த நெற்றி விசாலம். ஆள் அழகன் மட்டுமல்ல, ஆளப்பிறந்த களை,

அதுதான் அம்மாவுக்கு அத்தனை உதை வாங்கியும், இத்தனை வயதாகியும் மயக்கம் தெளியவில்லையோ? அம்மா ஒரு அசடு. ரகளையானால் மூணு நாளாவது பேசாமல் இருக்கணும். அடுத்த அரை மணிக்குள் இன்னிக்கு உங்களுக்குப் பிடிச்ச டிபன் அடை. இன்னிக்கு ரேடியோவில் உங்களுக்குப் பிடிச்ச கச்சேரி-ஆலத்துார் சகோதரர்கள்...' கெக்கேக்கே, என்றால் மனுஷனுக்கு ஏன் மண்டைக்கு ஏறாது? -

அப்பா, அம்மாவை ஏசியதில் அரைக்கால் பங்கு செல்லம் என்னிடம் கேட்டுப்பளா? உன்னோடு வாழ்ந்தது போதும்’னு எப்பவோ பிறந்த வீட்டுக்குக் கம்பி நீட்டியிருப் பாள். சொல்லவும் முடியவில்லை. மெல்லவும் முடிய வில்லை. என்றைக்கு ஒருநாள் எனக்கும் செல்லத்துக்கு மிடையில், எங்கே போய் முடியப்போகிறதோ? சிறிசுகளின் சச்சரவுகளைத் தீர்க்க, அவர்கள் சுபாவங்கள் படியும்வரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/148&oldid=544237" இலிருந்து மீள்விக்கப்பட்டது