பக்கம்:உத்திராயணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9:0 லா, ச. ராமாமிருதம்

சொல்லமுடியாது. அழுந்தியிருக்கும் ஸெல் தானாவே தற்செயலா விடுபட்டால், கோமா தெளிந்து நினைவு, உடலில் செயல் எல்லாமே, உடனே திரும்பிவிடலாமாம். இல்லை இப்படியே...'

உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தான். "இந்த மூணு வருஷமா என்ன நடந்துண்டிருக்கு? உயிரோடுதாணிருக்கேன்’னு அவரும் இருக்கார், நாங்களும் இருக்கோம்னு வளைய வரோம், எந்தக் காரியம் நிக்கறது. நிறுத்தமுடியறது?’’

"என் உடம்பிலே ஆயிரம் கோளாறு இருக்கு. சர்க்கரை, B, P. அல்லர்-அதெல்லாம் சொல்லிக்கற சமாச் சாரமில்லை. விறகு வெட்டிக்கு வைத்யம் விறகுக் கட்டை யாலேயேதான்- நல்லதாப் பேசுவோம். இடையிலே கோபாலனுக்குக் கலியானமாகி, நாட்டுப்பொண்ணுக்கு நேத்து வளைகாப்பு. நல்ல சம்பந்தமா வந்தது. விட முடியல்லே. இடையில் அவன் ஆபீசில் மூணு மாதம் ஏதோ ட்ரெயினிங்குக்கு அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சா.'

அம்மா ஒண்ணு விடமாட்டாள்.'" "ஏன் விடணும்? இத்தனை கஷ்டத்தில் இருக்கிற ஒண்ணு ரெண்டு தென்பைச் சொல் லிப் பலத்தை வரவழைச் சுக்கத்தான். இந்த மூணு வருஷத்தில் எங்கள் எல்லோ ருக்கும் கண்ணிரே வறண்டுபோச்சு’’ என்று மாமி சொல்லும் போதே மாமிக்குக் கண் துளும்பிற்று.

நான் ஊர் திரும்பி ஒரு மாதமாகியிருக்கும். மஞ்சள் தடவி, திருச்சியிலிருந்து கடிதம்.

-செள. பிரேமாவுக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் பெண் பிறந்தது. தாயும் குழந்தையும் செளக்யம். (தேதி-நினைவு இப்போ இல்லை) அன்று புண்ய வசனம்

பி. கு: குழந்தைக்கு அகிலாண்டம் என்று பெயரிடப் போகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/100&oldid=544189" இலிருந்து மீள்விக்கப்பட்டது