பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


இதனை ஏற்பது போன்று, "எவன் எனக்கு இலை, மலர் கனி அல்லது நீரை அன்போடு ப.ைக்கின்ருனோ அத்துரய மனத்தானுடைய அன்பளிப்பை நான் சுவைக்கிறேன்' எனக் கண்ணன் பேசியதாகக் கீதை பேசுகின்றது. சமணம், தோற்றத்தில் ஒரு துறவுக் கோட்பாட்டு மதம். முன்னையச் சமணர் அழகு, கலை, சுவை, ஆரவாரம் இவற்றில் மனம் ஊன்றாதவர். காலப் போ க் கில் பெருகிய சூழ்நிலை வெள்ளத்தில் சமணத்தில் இல்லறத்தாரும் அமைந்தனர். பின்னர் பையப் பைய வழிபாடும் வழிபாட்டுப் பொருள்களும் புகுந்தன. அவற்றுள் பூ தனியிடம் பெற்றது. சமணர்களது கடவுளாகிய அருகனைப் பூவன்' என்றே போற்றினர். பூமேல் நடந்தான்’ என்பது அவனது சிறப்புப் பெயர்களுள் ஒன்று. பிண்டி என்னும் அசோக மலர் அவனுக்குரிய மலர். அருகன் பிண்டியின் நிழற் பெருமான். அவன் அமரும் இடத்து அசோகமரம் பொன் பூவாகவே பூக்க அருளியவன் என்பது அம்மத வழக்கு. அதனால் அச்சமயத்தவரான இளங்கோவடிகளார், "பொலம் பூம் பிண்டி நலங்கிளர் கொழு நிழல்'45 என்றார். காலப்போக்கில் வழிபாட்டிற்கும் பிண்டிப் பூவைக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அணி, ஒப்பனைப் அன்றிப் பனடப்புப் பொருளாக மலர் அமைந்தது. நாள்தோறும் கோவிலுக்குச் சென்று அங்குள்ள தீர்த்தங்கரர்' எனப்படும் பிறவிக்கரையேற்றுவார் சிலைகளுக்கு மலரைப் படைத்து வழி பட்டனர். துறவிகளும் அதனைச் செய்வதுண்டு. இது பூப்பலி' எனப்பட்டது. இப்பூப்பலி மரபும் ஆயிற்று. 'வண்டு சூழ் பூப்பலி சுமந்து தாள்வலம் கொண்டு சூழ்ந் தெழுமுறை இறைஞ்சி'46 一6T6öT திருத்தக்கத்தேவர் வழிபாட்டிற் பூப்பலியைக் காட்டியுள்ளார். எனவே, வரட்டு மதமாக இருந்த சமணம் பூவால் வண்ண மதம் ஆகியது. 44 பக. கீ: அதிகாரம் 9 : 26 45 சிலம்பு: நாடுகாண் காதை: 21 46 சிவ. சி: 8052