பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii இன்றியமையாத அம்சம் என்பது மறுக்க முடியாத உண்மை. நான் எழுத்தாளன். என் எழுத்தை நானே ப்ரசுரித்துக் கொள்ள எனக்கு வக்கில்லை. என் புத்தகங் களை விற்று, போட்டமுதலை மீட்க சாமர்த்தியமும் கிடையாது. (முதலில் போடுவதற்கு முதல் ஏது?) அப்படி யும் ஒரு முறை சூடிக் கொண்டும் ஆயிற்று. * 53,153 வாக்கில் கானும், நாலைந்து உற்சாகமான இளைஞர்களும் சேர்ந்து, என் முதல் கதைத் தொகுதி, "ஜனனி'யை வெளிக்கொண்டு வந்தோம். கி.வா.ஜ. அவர் களின் தலைமையில் வெளியீட்டு விழா, பால் பாயலம் வினியோகம், ஒவ்வொரு பிரதியிலும் தனித்தனியாக என் கையொப்பம்-தடபுடல்தான். பிரதி விலை ரூ.8-இல் அந்தத் தரத்தில் (Bamb00 Papet), புத்தகத்தை இங் நாளில், அதைப்போலப் பன் மடங்கு செலவில் கூடக் தயாரிக்க முடியாது என்று திண்ணமாகக் கூறுவேன். புத்தகத்தைக் கலை சிருஷ்டியாகக் கொண்டு வந்தோமே தவிர அதன் வியாபாரத்தில் எங்களுக்கு விஷயமோ, அனுபவமோ பூஜ்யம். இடை மனிதனை நம்பி, முன்பின் எங்களுக்குத் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு, அவர்கள் எங்கள் தலையைத் தடவி, மோசம் போனோம். வீட்டுக்குத் தெரியாமல், புத்தக சம்பந்தமாக, P.F.ல் வாங்கின கடன் ரூ. 1500/- மாதத் தவணையில் அடைத்து மீள்வதற்குள், உன்பாடு என்பாடு, ஏண்டாப்பா மாட்டிக் கொண்டேன் என்று ஆகிவிட்டது. w w ஆனால் அந்தப்பதிப்பின் பிரதி, இப்போது Collector's item ஆகிவிட்டது. இப்பவும் என் எழுத்து மூலம் பரிசய மான புது கண்பர்களின் வீடுகளில் அதை அபூர்வமாகச்