பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢ) ff • శ్రీ : "H - 73 பச்சைக் குரூரத்தையும், அதன் பட்டை தீட்டிய அழகை யும், பிளந்த காக்கையும் கண்டு அதிசயித்து கின்றான். கொஞ்சநேரம் அவனைச் சிந்தித்துவிட்டுத் தலையை உள் ளுக்கிழுத்துக் கொண்டது. ஆனால் அவன் இயற்கைச் சேஷ்டை போகவில்லை. இன்னொரு கல்லை விட்டெறிக் தான். சீறிக்கொண்டு அது எழுந்ததுதான் அவனுக்குத் தெரியும், அங்குப் பிடித்த ஒட்டம், வீட்டுக்கு வந்து, கதவைத் தடா லென்று சாத்தித் தாளிட்ட பிறகுதான் நின்றது. உடல் நாய் போல் இரைத்தது. அன்றைக்கு அவனுக்குச் சாதம்கூட வேண்டியில்லை. தாக்கத்தில்கூட உளறினான். பிறகு அடிக்கடி, அல்லது அப்போதைக்கப்போது, அது அவன் கனவில் வந்துகொண்டிருந்தது. ஒரு சமயம் தவளையைப் பிடித்துக்கொண்டிருக்கும்; அல்லது ஆடிக் கொண்டிருக்கும்; அல்லது உடம்பை முறுக்குப் போல் சுற்றிக்கொண்டு, ஒருமுழ உயரத்திற்குத் தலையை மாத்தி ரம் , தூக்கி அவனையே வெறித்துப் பார்த்துக்கொண் டிருக்கும். ஒவ்வொரு சமயம் அவனுடனேயே படுக்கையில் குளிருக் கடக்கமாய், ஒட்டிக்கொண்டு படுத்திருக்கும். அவன் கண்களிலோ, வாயிலோ முத்தமிட்டு, முகத்தை கக்குவது டோலுமிருக்கும். திணறித் திணறி அதனின்று விடுபட முயன்று விழிக்கையில், உடல் முழுவதும் வேர்வை யில் குளித்திருக்கும். ஆனால் காலை வெயில் உடலில் படவேண்டியதுதான்; மறுபடியும் மனத்தில் தைரியம் பிறந்து, பல்லைக்கூட விளக்காமல் விளையாட ஒடிப்போய் விடுவான். அவனுக்கு வீடு பிடிக்கவில்லை. சுற்று முற்றும் இருப்பவரையும் பிடிக்கவில்லை. முக்கியமாய் ஸ்திரீகளைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஒன்று அவனை ஒரே குழந்தையாகவே நடத்தினார்கள்; அல்லது எதற்குமே மதிக்கவில்லை,