பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1s? பார்க்கவி களுடைய எண்ணங்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகளல்ல. ஆனால் அவர்களுடைய எண்ணங்களுக்கு மட்டும் எண்ணியபடியே செயலாகிவிடும் வலிமையுண்டு. அப்படிப் பலிக்கையில் அவர்களைச் சுற்றி எப்பவுமே சூன்யந்தான். அபபோது அவர்கள் ஆபத்தான பிறவிகள் ஆகி விடுகிறார்கள்.' - அவர் விசனத்துடன் பெருமூச்செறிந்தார். எழுந்து போய் எதிரே ஒரு செடியிலிருந்து ஒரு பூவைக் கிள்ளிக் கொண்டு திரும்பிவந்து கட்டிலில் உட்கார்ந்தார். 'பார்க்கவி, பிறந்தாய்; பிறந்து ஒருவாரத்தில் உன் தாயாரை உருட்டிவிட்டாய்." வெடுக்கென ஒரு இதழைப் பிய்த்தெறிந்தார். அது காற்றில் சுழன்று சுழன்று சென்றது. 'உன் அம்மா இருந்த வரைக்கும் ஏதோ லக்ஷ்மி மாதிரியிருந்தாள். அவள் இருந்த வரைக்கும் எனக்கும் எல்லாம் சரியாய்த்தானிருந்தது. அவள் போனாள். நீ வந்தாய். புடிச்சுதய்யா எனக்கும் சனியன்! என் ஆஸ்தி யெல்லாம் நாஸ்தியாச்சு.' - இன்னொரு இதழ் காற்றில் பறந்தது. மூன்று இதழ் களுடன் மூளியாய் அவர் விரல்களிடை திரியும் பூவைப் பார்க்கவே அவளுக்குப் பயமா யிருந்தது. அவர் அவளைப் பார்க்கவில்லை. அவர் தன்னோடு பேசிக்கொண்டிருந்தார். இல்லை. தன் கைப்பூவோடு பேசிக்கொண்டிருந்தார். இது தான் பூவின் பாஷையோ?

  • உனக்கு முன் பிறப்பு எனக்கு ரெண்டு பெண்கள் உண்டு. இருந்த மாடு, மனை வீடு; சொத்து எல்லாம் விற்று, கடன்பட்டு, அவர்களைக் கட்டிக்கொடுத்து, அவ ரவர் வீட்டுக்கு அவர்களை ஒட்டியும் விட்டேன். அன்னியி