பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G}爵”。守。乒#”。 55 “ஒரு கடைக்காரன் வேலையில்லேன்னு சொல்லிட்டு கான் படியிறங்கினப்புறம் என்னை மெனக்கெட்டு மறுபடி யும் கூப்பிட்டு, நான்தான் கடைக்காரன்-கான் இங்கே என்னாத்துக்குக் குந்திக்கிட்டு இருக்கேன் தெரியுமா?’ன்னு கேட்டான். " தெரியாதே இன்னேன். எனக்கெப்படித் தெரியும்: 莎够落 சாமான் வாங்க வரவங்களுக்கெல்லாம் அது இல்லே, இது இல்லேன்னு சொல்லியனுப்பத்தான் குந்திக்கிட்டு இருக்கேன். இல்லை இல்லை இன்னு கத்திக் கத்தித் தொண்டை வத்திப்போச்சு. இல்லைப் பாட்டுப் பாடத் தான் இனிமேல் ஒரு ஆள் போட்டுக்கணும்போல் தோணுது. போப்பா, புளைக்க மாட்டாதவனே! பொட்டலங் கட்டக்கூட காயிதமில்லாத காலமீது- அது கூட யுத்தத்துக்கு வேனுமாம்-கீ கூடப் போறதுதானே! இன்னு சொல்றான். “இந்தப் பட்டணத்துப் பேச்சு நமக்குப் புரிய மாட்டேன்னுது எல்லாத்துக்கும் எடக்காப் பேசறாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் ஒரு ஆள் என்னை ஒரு காரணமுமில்லாமலே விரட்டிட்டுப் போனான். அத்தோடே கொளங்தையெத் தனியா விட்டுட்டு எவ்வளவு கேரம் வெளிலே சுத்த முடியுது? உன் மாதிரியா? காலைலே போன பொம்புள்ளே, திரும்பி வர இத்தனை நேரமாச்சு துன்னா என்னத்தை சொல்றது!’ “என்னாத்தை சொல்லப்போறே யாராவது இஸ்துக் கிட்டு ஓடிட்டாங்கன்னு பாத்தியா?" அவன் மனம் சுருக்கென்றது. வயித்துக்குக் கஷ்டம் வந்துட்டுதுன்னா, கொண்டவளுக்குக்கூட இவ்வளவு எளக்காரமாப் போயிடுமா?..."