பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ಆT೩!ff 65T பழக்கமில்லாததால், தாம்புக் கயிறு உள்ளங்கைகளை வீறு வீறாய் அறுத்திருந்தது. அணைத்துக் குலுக்கி அதன் அழுகையை அடக்க முயன்றான். ஆசைப் பெருக்கில் அர்த்தமற்ற சப்தங்கள் அவன் வாயினின்று பிறந்தன. ஆயினும் குழந்தையைத் தேற்ற அவை வகையற்றுப் போயின. அதன் கத்தல் இன்ன மும் அதிகரித்தது. 'என்னi தாயில்லாக் குளந்தையா?” அவனுக்குத் தாக்கிவாரிப் போட்டது. ஏற்கெனவே உள்ளுற வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறான்: காலை யில் வேலை பார்க்கப் போன பெண்பிள்ளை-குரியன் உச்சிக்குப் போயிட்டது-இன்னமும் திரும்பின பாடில்லே. இந்தப் பட்டணத்திலே ஊருக்குப் புதுசு. ஆண் புள்ளைக்கே இத்தனை ம்ோட்டார் வண்டிக்கும் டிராம் வண்டிக்கும் சடுக்கா வண்டிக்கும் ரிக்ஷா வண்டிக்கும் நடு வுலே ஆளைப் பம்பரம் சுத்தி விட்டாப் போலே இருக்குது. அவளை எது வாரி வாயிலே போட்டுக்குதோ? யார் இந்த ஆள் அவசகுனி மாதிரி?... அந்த ஆள் எதிர்த் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டு ஒரு துண்டுப் பீடியைப் பிடித்துக்கொண்டிருந் தான். அவன் முகத்தைய பார்த்து வயதையோ அந்தஸ் தையோ நிர்ணயிப்பதற்கில்லை. கால்மேல் காலை மடித் துப் போட்டு உட்கார்ந்துகொண்டு வெகு ஆத்திரத்துடன் பீடியைக் குடித்துக் கொண்டிருந்தான். 'இல்லே? காலைலே போனா-இன்னும் வரல்லேகுளங்தை வவுத்திலே ஒண்ணுமில்லே.' "யார் வவுத்திலே தாணய்யா இப்போ என்ன இருக் குது? எரிச்சல் தானிருக்குது. ஊருக்குப் புதிசா ஏதேனும் வேண்டுதலையா?...'