பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ர். ச. ரா. I (o மூணாவள் ; 'பூமணத்தோடே!' என்று தாளத் தோடு முடிப்பாள். அம்மா மூத்த நாட்டுப் பெண். உலகம் தெரிய ஒரு முறை சறுக்கினால் அப்புறம் ஒரே சறுக்கல்தான். 'அப்படி யெல்லாம் சகிச்சுண்டு உன்னை ஆளாக்கினப் புறம் சாக்கடையில் போய் ஸ்நானம் பண்ணிண்டு வந்ததை யேடா’ என்று அம்மா அடிபட்ட மிருகம்போல் கத்து வார். இந்த வீட்டில் எதைச் சாக்கிட்டு சண்டைவரும். அது எப்போ எப்படி ஒயும் என்றே சொல்ல முடியாது. வீட்டில் சுழலும் காற்றுக்கே ஒரு விறுவிறுப்பு இருந்தது அதில் சண்டையின் அண்ட கோசங்கள் எந்தச் சமயத்தில் காம் நம் உருவைப் பெறப் போகிறோம் எனக் காத்திருந்தபடி நீந்திக் கொண்டிருக்கும். இப்போத்தான் நாலு மாலத்திற்கு முன்னால்-அவர் போறத்துக்கு ரெண்டு மாஸ்த்துக்கு முன்னால்-ஒரு முக் காலணாக் கடிதாசு வீட்டுக்கு வந்தது. விலாசம் விலாசம்ாத் தேடியலைஞ்சு திரிஞ்சுட்டு, தபால் ஆபீஸ் வால் ஒண்ணைத் தாங்கிண்டு, முத்திரையின் உதையெல்லாம் பட்டுண்டு, அது வந்த வேளைக்கும் அதை எழுதின தேதிக்கும் ஆறுமாஸ் இடை நாள் இருக்கும். அவள் தகப்பனார் காலமாகிவிட்ட செய்தி கண்டிருந்தது. யாரோ அக்கம் பக்கத்தில் அரை குறையாகத் தெரிந்த ஒரு மாமி அவளுக்கேதான் எழுதியிருந்தாள், கொச்சை கொச்சை Աfք 5: - - 'உன் அப்பாவை மூணு நாளா தேடு தேடுன்னு தேடியும் அகப்படல்லே. கந்தவனம் காத்தம் அடிக்க ליד חשו