பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷学 புற்று “இப்போ என்னம்மா வந்துடுத்து அழிஞ்சால்தான் இப்போ என்ன முழுகிப் போயிடுத்து? ஏன் இப்படி பிரமாதப்-' ஹோ, பாவி என்ன பண்றே?-’ அவள் கண்கள் பயங்கரத்தில் அகல விரிந்துவிட்டன. அவள் அவன் முகத் தைப் பார்க்கவில்லை. அவள் கண்கள் அவன் கையைத் தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அப் பொழுதுதான் அவனுக்கு என்ன செய்தோம் எனத் தெரிக் தது. பேசிக்கொண்டே பூஜை விளக்கில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தான்... அவள் தன் வசமிழந்து விட்டாள். அவள் எதிரில் திடீரென்று திரை கிழிந்து, அவளுக்கு மாத்திரம் தரிசனம் ஆவதுபோல், முகம் மாறியது. கன்னத்தில் பளிர் பளிர்' என்று அறைந்து கொண்டாள். கண்கள் அமானுஷ்யமான ஒளியுடன் ஜொலித்தன. ஹே சுப்பிரமணியா! என்னை மன்னிச்சுடு-நான் இவனைப் பெத்தே யிருக்கப்படாது! என்னத்தைப் பெத் தேன்னு இப்பொழுதுதான் கண்டேன்! நான் பெரும் பாவத்தைப் பண்ணிப்பிட்டேன்-என்னை மன்னிச்சுக்கோ 唤 冷 强母 & 玄 மன்னிச்சுக்கோ-' தடாலென்று அவள் கீழே விழுந்துவிட்டாள். அவன் சிரித்துக்கொண்டே புகையை ஊதிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான். வீடு திரும்பும் வேளைக்கு அஸ்தமித்து விட்டது. அவன் வீடே ஊருக்குக் கொஞ்சம் ஒதுக்கு. மேட்டு கிலத் தில் இருந்தது. அதில் சாயந்தரம் திண்ணைப் புரையில் ஏற்றிவைக்கும் அகல் விளக்குச் சுடர் தொலைவிலேயே தெரியும். ஆனால் இன்று விளக்கு எரியவில்லை. அதுவே