பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர். சி. தி , 15? இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மூன்று ஆகிவிட்டன. எனக்கும் உறுதியான வேலைக்கும் ராசி இல்லை. ராசிக்கு வழியில்லை. ஆகவே அனுமார்தான் எல்லாக்காரிய சித்தி, ராமன் ஹனுமான் எஜமான் வேலைக்காரனா? ஹனுமான் தன்னை ராமனுக்குப் பணியாளாகப் பாவித்துக் கொண்டாலும், ராமன் தன்னை எசமானாக நினைத்துக் கொண்டதில்லையே! ராமன் இல்லாமல் ராமாயணம் இல்லை, ஆனால் அனுமான் இல்லாமல் ராமகாரியமும் கடை பெற்றிருக்க முடியாது. அடிப்படை அனுமான் கடல் தாண்டி சீதையைக் கண்டிராவிட்டால் ராமாயணத்துக்கே திசைமாறிப் போயிருக்கும். பின்னரும் அனுமத் சாதனை கள் ஒவ்வொன்றும் சாமான்யமானவையா? இத்தனையும் செய்து, இனியும் எத்தனை செய்யவும் தயாராக, எதற்கும் கனவில்கூட கைம்மாறு எண்ணாது இது என்ன அனு மனின் தலையெழுத்து எல்லாரும் அவதாரம் எனும் சமா தானத்தைத் தள்ளு. மனித இயல்பில் சீர் தூக்கிப்பார். இது காலம் பகுத்தறிவினுடையது. - ராமனுக்கும் அனுமனுக்கும் இடையில் இந்த அபி மானம் எந்த வகையைச் சேர்ந்தது? பக்தி: அன்பு?? விசுவாசம்??? காதல்???? ஆனுக்கும் ஆணுக்குமா கையை ஓங்காதீர்கள். எனக்கு அடைக்கலம் இருக்கிறது. காதலாகிக் கசிந்து. சம்பந்தர் பாடியாச்சு. ஃப்ராயிடும், ஐங்கும் வந்த பிறகு, மனோதத்துவ ஆராய்ச்சியாளர்க்கு எல்லாமே SEX தான் வளையிலிருந்து எட்டிப் பார்க்கிறேன். ★ ★ 青