பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a)扩。亨。 sffr. 89 திருந்தறதாயிருந்தால், உன்னை நான் கல்லா’ப் பெட்டியில் உட்கார்த்தி வைப்பேன்- என் பெண் ணைக்கூடக் கொடுப்பேன்-போ, போ-சொக்காயை யும் வேஷ்டியையும் மாத்திண்டு கோகர்ணத்தை எடு-" 'அவன் எப்பொழுதும் இப்படிப் பேசியதே யில்லை. நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவசர அவசரமாய் அங்கு விட்டுப் போனேன். 'எனக்குச் சமைக்க சரியாய்த் தெரியாவிட்டாலும், பரிமாற என் எஜமான் என்னை நன்றாய்ப் பழக்கி யிருக் தான். ஏனெனில், நான் உருவா யிருப்பதாலும், சரியாய் உடுத்துவதாலும், பந்திக்கு எடுப்பாய் இருப்பேன். ஆகை யால் அவன் பேருக்கும் எடுப்பா யிருந்தது. முக்கியமான சாமான்களைத் தூக்குவதற்கு கான்தான் முதலில் போயாக வேண்டும். மற்றவர்கள் இதைப்பற்றி அவனிடத்தில் அலுத்துக்கொண்டால், அதெல்லாம் உங்களுக்கு தெரி யாது; வியாபார சூட்சுமம். சரக்குப் பாதி ஆள் பாதி-இது ரெண்டும் சேர்ந்தால்தான் முக்கியமாய் இந்தச் சமையல் தொழிலுக்கு ரஞ்சகம். இல்லாவிட்டால் இவன் சமையல் லட்சணத்துக்கும் கை வாசனைக்குமா இவனைக் கட்டிண்டு அழறேன்?’ என்பான். "அதுவே நான் சாம்பார் எடுத்தேன், கூட்டெடுத் தேன், கறி எடுத்தேன், ரளம் எடுத்தேன். 'பந்தியில் அவளும் உட்கார்ந்திருந்தாள். அவள் இலைக்கு நான் வரும்போதெல்லாம் என்னைக் குறும்பாகப் பார்த்துக்கொண்டே சிரித்துக் கொண்டிருப்பாள். எனக்கு எரிச்சலாயிருந்தது. இரு இரு மகளே- என்று கறுவிக் கொண்டே பாதாம்கீரை எடுத்தேன்.