பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©fr• Ꭶe ErᏑ. j99 நான் இப்போ சொல்ற கட்டத்தில், என் வீட்டில், ஒண்டுக் குடித்தனமா ஒரு ஜோடி வந்தது. குழந்தை குட்டி யில்லை. மாமிக்கு முப்பது வயசிருக்கும் வர்ட்டசாட்ட மாயிருப்பாள். ஒரு மத்தியானம் வீட்டில் எங்கள் இருவரைத் தவிர யாருமில்லை. ‘சாம்பு, தாயக்கட்டான் ஆடலாமா? ஆட்ட சுவாரஸ்யம். காய் நகத்தற சிக்கலான யோசனை யில் மாமி எழுந்து போனதுகூடத் தெரியல்லே. கதவுத் தாழ்ப்பாள் விழற சத்தம் கேட்டுத் தலைகிமிர்ந்தால் சாம்பு கண்களைப் பொத்திக் கொண்டான். அந்தத் தருணம் அவனை இப்போது ஊடுருவுகையில் உடல் பூரா ஒருமுறை அவனுக்குக் குலுங்கிற்று. "அவள் என்னை அழிச்சாள்; நான் பஸ்மமாப் போனேன்னுதான் சொல்லனும். அந்தக் காரியத்துக்கு, அதுவும் அவளோடு, நான் இன்னும் தயாராகல்லே... என்னவோ அருவருப்பா, அசிங்கமா அந்த வடிக்' தான் மிச்சம். அந்தச் செய்கையில் எனக்கு எந்தப் பங்கு மில்லை. அவளுக்குக் காரியம் முடிஞ்சதும் அவள் ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டே. ‘சாம்பு No Good, ஆனால் எனக்கு யாருமே No Good. என் அதிர்ஷ்டம். சாம்பு, சமத்தாயிருப் பேன்னும் நினைக்கறேன். இல்லாட்டா, உன் பாடுதான் கஷ்டம். விவகாரம்னு வந்தால், உன்னை கம்புவாளா, கான் சொல்றதை கம்புவாளா? நீயே யோசனை பண்ணிக்கோ.' என்னைச் செல்லமாகக் கன்னத்தில் தட்டினாள்,