பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q)f → 字。 Tf。 151 வாழ்பவர் ஒன்றும் சாதித்து விடவில்லை. ஏதும் அறியா அபிராமி, நீ கடைசியாக எடுத்த துணிவு கூட உனக்கு ஒரு கேலியாகத்தான் இருந்திருக்கும் என்றுத் தோன்றுகிறது. அந்த வயதில் வாழ்க்கையைக் கேலி காட்டிய ஞானியா, பேதையா? உன் உயிரைப் போக்கிக் கொள்ள உன் உரிமையை நிலை காட்டிய ஸ்வதந்தரியா? - அபிராமி, வானத்தில், இந்த நகrத்ரக் கொள்ளையில் எங்கு இருக்கிறாய்? உன் கூடு எங்கே? 演 黄 女 கினைவின் சருகுகள் சலசலக்கின்றன. அவை மேல் யாரோ நடந்து செல்கின்றார்கள். யாரேனும் நடந்து சென்று கொண்டே தானிருப்பார்கள். பாதை ஒருவருக்கு மட்டும் சொந்தமல்லவே! காதல்-ஊஹாம். இந்தப் பெயர் எனக்குச் சரியாகப் படவில்லை. மீறிப்போன உதவுபடியில் அவலமாகி விட்டது. அது சுமக்கும் பொருள் கனம், வீச்சுக்கு ஓசை யின் கார்வை எப்படி இருக்கவேண்டும்! காதல்!-சத்தத்தில் உப்பு சப்பு இல்லை. ஆனால் சொல்ல வந்தது இது அல்ல. வயது முற்ற முற்ற அனுபவம் கண்ட உண்மை. காதல் என்பது ஒருவரே பிடித்துக்கொண்ட கோட்டை அல்ல. கிரந்தரமாக ஒருவர் மேல் மட்டும் அது பதிந்திருக்க முடியாது. அது இயற்கையுமல்ல. மனிதனின் உண்மையு மல்ல. அப்போது அதன் பெயர் அதுவுமல்ல. ஒரு கவிதா நேரம் தருணோதயத்தின் அனுக்ரஹம். லோகோஸ்ருதியினின்று தெறித்த ஒரு சொட்டு. பட்ட இடம் கன்றிப்போ. இந்த நேரங்கள், தெறிப்புகள் அவ்வப் போது நேர்ந்து கொண்டேயிருக்கும். பட்டவர் சுட்டவர் பாக்யவான்கள்,