பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராக் த்ரோக்: நம்பி அபிராமி. அன்றொரு நாள், கிணற்றில் குடி ஜலம் மொள்ள வந்தாயே, நினைவிருக்கிறதா? எத்தனையோ முறை வந்திருக்கிறாய்? ஆனால் நான் குறிப்பிடுவது அந்த ஒரு காளைத்தான். உன் திருமணத்தன்று, உன் கடைசிப் பிரயாணத்தில் உன் வீட்டுக் கிணற்றடிக்கு நீ போகும் வழியில் என்னைப் பார்த்த பார்வைக்கு இன்னமும் அர்த்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். உன் மணப்பந்தலின் தோரணங்கள் என்மேல் உராய்ந்து கொண்டிருக்கும் பிரமை இன்னும் தட்டுகிறது. நாம் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்த வயது ரெண்டுங்கெட்டான் வயது. அதில் ஆண்களின் அவஸ்தை ஒருபாடு. பெண்கள் உங்களின் மன ஆழம் உங்களைப் படைத்த ஆண்டவனும் அறிய இயலாதது. நான் எம்மாத்திரம்? என்றுமே நீ எனக்குத் தூரதர்சனி. இப்பத்தான் நீ உன் நகடித்ரக் கூட்டுக்குள் புகுந்து விட்டாயே! கானும் கொல்லைப்புறம் வந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். நீ தவலையை கிரப்பிவிட்டு, கிணற்றுச் சுவர் மேல் இருந்த தவலையை இடுப்பில் ஏற்றிக்கொள்ளத் தயார் பண்ணிக் கொண்டிருந்தாய். ரீ கிணற்றுக்குள் எட்டிப்பார்த்து என்னா பார்க்கறே?’ என்ன பார்த்துக் கொண்டிருந்தேன், உனக்குத் தெரி யும். என்வயதில் t பெண். உன் உடல்வாகில் உணர்வு வாகில் என்னைவிடத் தெரிந்தவள் அல்லவா?