பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர், ச. ரர். 129 ஒரு முறையோ மூன்று நாட்களுக்குக் கதவையடைத்துக் கொண்டு விடுவாள். அன்ன ஆகாரம், குளி ஒன்றும் கிடை யாது. சந்திரனை ராகு பிடிப்பதுபோல் பெரிய மனச் சோர்வு அவளைக் கவ்விவிடும். அப்போது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள். காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அப்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்னாள். என்னால் கிஜமாகவே கேட்கவே முடிய வில்லை. காதையும் பொத்திக் கொண்டு கண்ணையும் இறுக மூடிக் கொண்டு விட்டேன். அந்தக் காrயை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது அண்ணா, தீபாவளிக்குச் சீனி வெடி வாங்கப்போய்ப் பட்டாசுக் கடையில் வெளி விபத்தில் மாட்டிக் கொண்டு விட்டாரா மேl எந்த மஹாயாவி சிகரெட்டை அணைக் காமல் தூக்கி எறிந்தானோ, அல்லது வேறு என்ன நேர்ந்ததோ? வெடித்த வெடியில் கடை சாமான்கள் பனைமர உயரம் எழும்பி விழுந்தனவாமே! அண்ணாவுக்குப் பிராணன் அங்கேயே போய் விட்டதாம். அண்ணாவுக்கு முகமே இல்லையாம். சில்லு சில்லாய்ப் பேந்து விட்டதாம். முகமிருந்த விடத்தில் துணியைக் போட்டு மூடிக்கொண்டு வந்தார்களாம். சேகர் அப்போ வயிற்றிலே மூணு மாசமாம். இப்போ சேகருக்கு வயது ஏழா, எட்டா? கிஜம்மா கேக்கறேன்; இந்தக் கஷ்டத்தை நீங்கள் எல் லோரும் எப்படி ஸ்ஹிச்சிண்டிருந்தீர்கள்? அம்மாவும் அப்பாவும் எப்படி இதிலிருந்து மீண்டார்கள்? நீங்கள் எல்லாரும் முதலில் எப்படி உயிரோடிருக்கிறீர்கள்? காந்திமதி மன்னி கருகிப் போனதற்குக் கேட்பானேன்? பா.-9