பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கறந்த பால் ஒவ்வொருத்தர் மாதிரி தினப்படியே பரபரப்பும், ஏதேனும் அசாதாரணம் நேர்ந்துகொண்டிராமல், பதற்ற மற்ற அவருடைய வாழ்க்கையில் இந்த விக்ரஹம் கிடைத்தது அவருக்கு ஒரு அபூர்வமான சம்பவம் தானே? நன்கு விடிந்த காலை வெளிச்சத்தில் விக்ரஹத்தைச் சோதித்துப் பார்த்தார். சுமார் ஏழங்குல உயரத்தில், நல்ல கனம். பஞ்ச உலோகங்களும் சேர்ந்திருக்குமோ? அம்பாள் தவத்திலிருப்பது போல் ஒரு அசாதாரண பிரதிஷ்டை. வலது காலை ஊசி மேல் ஊன்றிய படி, முழு காஷாயத்தில், தியானத்தில் ஆழ்ந்து கிற்கிறாள். அப்பா! என்ன அழகு! என்ன பொலிவு. இந்த வடிவம் வீட்டில் வைத்துக்கொள்ள உரியதா அல்லது கோவிலில் சேர்த்துவிடலாமா? என்று சந்தேகம் தோன்றிற்று. காளைக்குத் தீர்மானம் பண்ணலாம் என்று காளை, காளையாகத் தள்ளிப்போய், கண்டெடுக்கப் பட்டவள் ராஜராஜேஸ்வரி படத்தடியில் தங்கி விட்டாள். தினப்படிக்கு மஹாநைவேத்யம் நைவேதயாயி. ஆர்கரவாரம் Liாய)ே 10. காஷாயணி காத்யாயினி தபஸ்வினி கன்யாகுமரி தேவி வந்தே வந்தே அவளுடைய ஆகர்ஷம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. ஆபீசில் சிக்கலான ஃபைல் ஒன்றில் ஊன்றி இருக் கும்போது, பக்கங்களிடையே கரென்ஸி கோட்டில் water mark போல் அவள் வடிவம் தோன்றும். விஷயத்தின்