பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர், ச. ர்ா. 111 என்ன ஆகிவிடும்: சாந்தியைத் தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக் கூடாது என்றால் பிள்ளைகள் கலியாணம் பண்ணிக்கொள் வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே காங்கள் எல்லாம் வெட்கம்கெட்டவர்களாகி விடுகிறோம்? ஆனால் அம்மாவே சொல்லியிருக்கிறாள். கூட்டுக் குடித்தனம் என்றால் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில்தான் வாழ்க்கைப் பட்டாளாம். இடம் போதாத வீட்டில் காலுஜோடிகள் வாசம் பண்ண னுமானால் என்ன பண்றது? வீட்டுக்கு விருந்தாளி வந் தூட்டால் கேட்கவே வேண்டாம். திடீர்னு ஒரு ஜோடி யின் ஒரு படுக்கை தானாகவே திண்ணையில் வந்து விழுந்து விடுமாம். சிட்டைப் போட்டுக் குலுக்கினாற்போல் யார் படுக்கை என்று போட்ட பிறகுதான் தெரியுமாம். சொல்ல வும் முடியாது, மெல்லவும் முடியாது; திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி வாயை முடிண்டிருக்க வேண்டியது தான். அம்மா சொல்றப்போ எனக்கு சிரிப்பாய் வரும், இந்தச் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னால் அப்பா கூடச் சொன்னார்: ‘'இதென்னடி, இது அவ்வளவு உசிதமோ? ஒரே சம்சார வீடாயிருக்கிறது. பையன் நாலுபேருக்கு நடுவில் நாலாமவனாயிருக்கிறான். இன்னும் கலியாணத் துக்கு ஒன்று இரண்டு பெண்கள் காத்திருக்கிறாப் போலி ருக்கிறது.' "இருக்கட்டும், இருக்கட்டும், சிறையக் குடித்தனமாயி ருந்து சிறையப் பெருகட்டும். நாளாவட்டத்தில் இதுதான் கம் பெண்ணுக்கு நல்லதா விளையும், பாருங்கோ. இப்போ நமக்கு என்ன குறைஞ்சு போச்சு? எடுத்தவுடனே இக்கு பிடுங்கல் இல்லாமல், கையை கோத்துண்டு போனவாளெல்