பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புற்று தான். அவனுக்கு அவனைப்பற்றியே அநாவசியமாய் இருந்தது. அவன் எதற்கும் தயாராய் இருந்தான். அதனால் அவன் மற்றக்காலிகளை விட அபாயகரமானவனாய் இருங் தான். கருணை என்பதே அவனிடமில்லை. அவன் தாயின் வேதனையோ, ம ற் ற வ ர் க ள் வேதனையோ, அவனைப் பாதித்த மாதிரி தெரியவில்லை. அவளுடைய முறையீடும், மற்றவரின் முறையீடும், ஏதோ பாறையின் மீது மோதும் அலைகளின் வியர்த்தமாய் இருக்கும். அசைந்துகூடக் கொடுக்காத அப்பாறையே போல, அவனுடைய மெளனமும் அச்சத்தை விளை வித்தது. தவறிழைத்தவனின் மெளனமாயிலாது, அது அலட்சியத்தின் மெளனமா யிருந்தது. மார்மேல் கையைக் கட்டிக் கொண்டு எங்கேயே பார்த்துக் கொண்டிருப்பான். ஜலத்துள் அமுங்கிய குடம்போல், அவன் தன்னுள் மூழ்கிக் கிடப்பான். 'என்னடா உன்கிட்டத்தானே சொல்றேன், இப்படிப் பண்ணலாமாடா?' என்று அவன் தாய் எரிந்தால், "ஊம்?-என்னம்மா சொல்றே?" என்று விழித்தெழு வான். அதுவரை என்ன யோசனை பண்ணிக் கொண்டிருந் தான் என்று கேட்டால், அவனுக்கே தெரியாது, முகத்தில் சுளிப்பு என்று இல்லாவிட்டாலும், அதில் சிரிப்பு என்றும் இல்லை. ஆனால் எந்தப் புற்றுக்குப் பால் வார்த்து அவனைப் பெற்றெடுத்தாளோ, அப்புற்றின் வழி அவன் போகையில் அதைப் பார்க்கையில், எரிமலையின் சுண்டிய கற்குழம்பு தனக்குள் தளைப்பதுபோல் அவனுள் ஏதோ அசைந்து கொடுக்கும். கொஞ்ச நாழியாவது அங்கு கின்று அை தச் சிந்தியாமல் போகமுடியவில்லை.