பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝g பார்க்கவி கினைவு மெதுவாய்க் கூட ஆரம்பித்தது. அவளோ அவள் தாயாரைக் கண்டதுகூட இல்லை. ஆனால் அதெப்படி அம்மா'ன்னுதான் முதலில் தோண்றது? 'அம்மா’ என்கிறது ஆதிமூலக் குரலோ: அந்தச் சமயம் அவள்மேல் ஒருகை பட்டது. ஸ்பரிசக் லிருந்து கணவர் என்று அறிந்தாள்; ஆனால் வாய் திறக்க முடியவில்லை. பல் கிட்டிவிட்டது. அவர் தொடும் தினுசி லிருந்து தான் முழித்துக் கொண்டது அவருக்குத் தெரிய வில்லை எனத் தெரிந்தது. அவர் கை அவள் தோளிலிருந்து மணிக்கட்டிற்கு இறங்கி, கைக் காப்பை கழற்ற ஆரம் பித்தது. முழுத் தங்கம்கூட இல்லை. உள்ளுக்குக் கட்டை கொடுத்து, மேலே அடித்ததுதான். நெஞ்சிலேயே சதை உரித்தாற்போல் அவளுக்கு ஒரு புது வெளிச்சம் உண்டாயிற்று. பயங்கர வெளிச்சம். முன்னது பின்னது, தற்போது எல்லாம் ஒருங்கே புரியும் அதிர்ச்சியில் வாயிலிருந்து வார்த்தையும் விடுபட்டது. 'இந்தாங்கோ, நானே தரேன்- சட்டெனக் காப்பை உருவி அவன் கைக்குள் திணித்தாள். கை சட்டெனப் பின் வாங்கிற்று. கால்கள் ஓடின. கதவு மூடிற்று. இப்போ எல்லாம் புரிந்தது. அம்மா இடுப்பில் சதா சர்வ காலமும் (துரங்கும்போதுகூட) சாவிக்கொத்து ஏன் தொங்குகிறது, அவள் கணவனுக்கு திடீர் திடீரென ஏற்படும் பண செளகரியங்கள். அந்தச் சமயங்களில் ஆடு அன்னிக்கு, மாடு மத்தியான்னம்' என்று அவர் கடத்தும் தர்பார்கள், சேர்க் தாற் போல் நாள் கணக்கில் காணாமல் போய்விடுவது, ஆட்கள் அவரை அடிக்கடி தேடி வருவது, சில சமயங்களில் எதற்கும் துணிந்த அவருடைய முரட்டு தைர்யங்கள், திடீர் உற்சாகங்கள், அடுத்தாற்போலேயே மூணு நாட்கள் மூஞ்சி யைத் தொங்கப் போட்டுக்கொண்டு யாருடனும் பேசாமல்