பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@》存。 F。 ffr。 f{}f 'ஊரில் ஒருத்தி யி-ரு-க்-தா-ள்-' என்று மன மில்லாமல் மனம் முனகியது. 'ஆ அப்படி வா வழிக்கு-' விஷம் தொண்டைவரையில் ஏறிவிட்டதால், வார்த்தைகளும் மூச்சும் தங்கித் தங்கி வந்தன. ஆனால் அசுரத்தன்மையான திடத்துடன் நினைவை யிருத்திக் கொண்டான். 'என் வீட்டுக்கெதிர் விடுதான். என்னுடனே விளையாடி, என்னுடனே வளர்ந்தவள். கறுப்புத் தான். ஆனால் களை; வயதுக்கு மீறிய வளர்ச்சி; ரொம்பத் துடிஆனால் வயது ஆக ஆக, எங்களிருவரிடையே யிருக்கும் பழக்கமும் குறைந்து, கடைசியில் அற்றும் போயிற்று. நானும் ஊருக்குப் பொல்லாதவனாய் விடவே-ஊர்ப் பெண் கள் அத்தனை பேரும் என்னைப் பொறுத்த வரையில், முக மூடிகள் ஆகிவிட்டார்கள். "ஆனால் சில சமயங்களில் அவள் ஜன்னலிலிருந்து என்னைப் பார்ப்பாள். கண்களின் பேச்சை எப்படி விஸ்தரிப்பது! ஒருநாள், நான் குளத்தில் குளித்துக் கொண்டிருங் தேன். குளக்கரையில் ஒரு அரசமரம். அதன் அடியில் ஒரு நாகப் பிரதிஷ்டை. அவள் அதைச் சுற்றிக் கொண்டிருந் தாள். அங்கு ஒருவருமில்லை. அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை. 'எனக்கு என்ன தோன்றிற்றோ, தெரியவில்லை. அப்பொழுது வெறும் வேடிக்கை எண்ணம் தான் என்று கினைக்கிறேன். இரண்டு தாவில் கரையேறி, அவள் எதிரில் போய் வழியை மறித்துக்கொண்டு கின்றேன். இடுப்பில்