பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f38 பாற்கடல் போய், எதிரோலமிட்டபடி எல்லோரும் குலுங்கக் குலுங்க ஒடுகிறோம். வீல் என அழுதபடி குழநதை அவன பாடடி மேல் வந்து விழுகிறான். என்னடா கண்ணே!' அம்மா அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சேகர் எப்பவும் செல்லப் பேரன். இரண்டாமவரின் செல்வ மில்லையா? பாட்டி பாட்டி!' பையன் ரோஸத்தில் இன்னமும் விக்கி விக்கி அழுகிறான். 'அம்மா அடி அடின்னு அடிச் - "سس قسساقين 'அடிப் பாவீ! நாளும் கிழமையுமாய் என்ன பண்ணிட் டாடா உன்னை: அம்மாவுக்கு உண்மையிலே வயிறு எரிந்து போய்விட்டது, கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ் சிருந்ததைப் பார்த்ததும். 'காக்தீ! ஏண்டி காந்திil-' சேழியறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்காந்திருந் தான். ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலைக் குந்திட்டு, அக்த முட்டிமேல் கைகளைக் கோத்துக்கொண்டு. கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள்வது கூட அவளுக்குத் தெரிய வில்லை. அவள் கண்களில் கோபக்கனல் வீசிற்று. உள் வலியில் புருவங்கள் கெரிந்து, கீழ் உதடு பிதுங்கிற்று. அம்மாவைக் கண்டதும் அவள் எழுந்திருக்கக் கூட இல்லை. "ஐயையோ!' என் பக்கத்தில் சின்ன மன்னி கின்று கொணடிருந்தாள். முழங்கையையிடித்துக் காதண்டை, “காந்தி மன்னிக்கு வெறி வந்திருக்கு' என்றாள். காந்தி மன்னிக்கு இப்படி கினைத்துக் கொண்டு, இம் மாதிரி முன்னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு,