பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f:3? இது ஆதாரனை இல்லாது எது? ஆமாம், பாட்டியின் உடல் சிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் நாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸ் வருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் கடப்பது போல், பாட்டிக்கு, காள், கிழமை, பண்டிகை தினம் போது தான், சர்வ ஜாக்கிரதையாய்க் குளிப்பாட்டு கடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை இந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங் களுக்கு எங்கே இடம் இருக்கிறது? எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்றுதான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே! மரம் சாய்ந்து விட்டாலும் வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என் இன்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று கினைக் இறேன். வருடங்களின் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் - உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகி விட்டது. பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி காற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள். காங்கள் எல்லாரும் கமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப்போல் மெளனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத் தில் கைகால் முடங்கி காக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல், குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது. இவர் இவரா, இதுவா? கோவிலில் காம் வணங்கிடும் சின்னத்திற் கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்: கோவிலில் தான் என்ன இருக்கிறது? . . . . . . . -"ஐயோ ஐயோ-' என ரேம் அறையிலிருந்து ஒரு கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப்