பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாற்கடல் ஒரொரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்ன்வோ நாங்கள் அஞ்சுபேரும் வெறுமென தின்று தெறித்து வளைய வருகிற மாதிரி நினைத்துக் கொள்ள லாம். ஆனால் இந்த வீட்டுக்கு எத்தனை நாட்டுப் பெண் கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் மிஞ்சி வேலையிருக் கிறது. சமையலை விட்டால், வீட்டுக் காரியம் இல்லையா, விழுப் புக் காரி ய ம் இ ல் லை யா, குழந்தைகள் காரியம் இல்லையா, சுற்றுக் காரியம் இல்லையா? புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங் கள்,........ இதெல்லாம் காரியத்தில் சேர்த்தியில்லையா? இந்த வீட்டில் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பந்திகள். ஒவ்வொருத்தருக்கும் சமயத்துக்கு ஒரு குணம். ஒருத்தருக்குக் குழம்பு, ரஸ்ம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண்டியாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மெளன விரதம் தலை கலத்தின்மேல் கவிழ்ந்துவிட்டால் சிப்பலைச் சாய்க்கக்கூட முகத்துக்கும் இலைக்கும் இடையில் இடம் கிடையாது; ஒருத்தர் சதா சளசளா வளவளா. கலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு இன்னும் பசிக்கி றதே, ரஸம் சாப்பிட்டேனோ? மோர் சாப்பிட்டேனோ? என்று சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பார். குழந்தை களைப் பற்றியோ சொல்ல வேண்டாம். எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின. ராத்திரி யானால் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்து விட்டது. அரைக்கிறதும், இடிக்கிறதும், கரைக்கிறது மாய் அம்மா கை எப்படி வாளிக்கிறது. மைஸ அர்ப்பாகு கிளறும்போது கம்மென்று மணம் கூடத்தைத் தாக்கு கிறது. காக்கில் பட்டதும் ம்ணலாய்க் கரைகிறது. அது மணல்கொம்பா, வெண்ணையா? எதை வாயில் போட்டா