பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இi: , ; ; , 181 அப்பா நாளடைவில் பேச்சடங்கிப்போய், எங்களுக் குப் பயம் தரும் மோனத்தில் மூழ்கிப்போனதற்குக் கார ணம் நாங்கள்தான். எங்கள் இரைச்சல், நாங்கள் எங்கள் நண்பர்களை அழைத்து வந்து அடிக்கும் அரட்டை இரைச்சல், எடை போட்டுப் பார்த்தால், உப்புசப்பு இல்லாத எங்கள் பேச்சின் சின்னத்தனம், ரேடியோவின் ஓயாத அலறல். அவருடைய சுபாவத்துக்குவிரோதம். அது ஒரு பக்கம் இருக் கட்டும்.அப்பா ஒரு முறை சொன்னதற்கு உடனே பதிலோ சம்மதமோ, கீழ்ப்படிதலோ இல்லாவிடின், அப்பா அதே வார்த்தை மட்டில் உறவை யாராயிருப்பினும் சரி துண்டித் துக்கொண்டு விடுவார். தன்னைத் தன் பத்திரத்தில் இழுத் துக்கொண்டு விடுவார். அப்பா, உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்ம்ை இல்லை. கான் எதற்கு, யாருக்கு, வளைந்து கொடுக்க வேண்டும்? வாய் வார்த்தையாக கடக்காத சம்பாஷணை. ஆனால் அதனினும் கனமானது. அங்குதான் அப்பாவின் மோனத் சக்தி. கேள்வி எங்களுடையது, அதற்கு அவருடைய பதிலும் எங்களினின்று-இது என்ன மாஜிக்? குற்றம் சாட்டப்படவில்லை. உணர்த்தப்படுகிறது? இல்லை, காங்களே உணருகிறோம். உணர்ந்து என்ன பயன்? நாங்கள் மாறுபவர்கள் இல்லை. விதி என்பது இதுதானா?