பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல் ர. ச. ரீர் . 95 'அன்றிரவு நாங்கள் இருவரும், ரயிலில் முதல் வகுப்பு வண்டியில் போய்க்கொண்டிருந்தோம். தொலை தூரத்துக்கு டிக்கட் வாங்கி விட்டேன். நான் வெகு நாழிகை எழுதிக் கொண்டிருந்தேன். துரக்கக் கலக்கத்துடன் கைகளை முறித்துக் கொண்டு என் னிடம் அவள் வந்தாள். ' என்ன எழுதுகிறாய்?' என்றாள்.

  • உன் தகப்பனாருக்குக் கடிதம்- என்றேன்.

'அவள் திரும்பிப் படுத்துக்கொண்டு தூங்கி விட்டாள். படுக்கையில் உறுத்துமென்றும், பொது ஜாக் கிரதைக்காகவும் நகைகளைக் கழற்றிப் பெட்டியில் வைத்துவிட்டாள். பெட்டிச் சாவி என்னிடமிருந்தது, 'கடிதத்தை முடித்ததுப் ஒருமுறை படித்துப் பார்த் தேன். எனக்கு ஒரு பிரதி வைத்துக் கொள்ளாமல் போனேனே என்றுகூடத் தோன்றியது. அவ்வளவு நன்றாய் அமைந்திருந்தது-' -'என்ன எழுதியிருந்தாய்?' என்று அவனின்றும் பிரிந்த அது கேட்டது. 'அது எப்பவோ கடந்தது; இப்பொழுது கேட்டால் எப்படித் தெரியும்?' என விசித்தான். 'இல்லை. இப்பொழுதுதான் உனக்குத் தெரியாத தெல்லாம் தெரியும்-புரியாததெல்லாம் புரியும் சொல்; உனக்கு வரும், பார்-’’ அது சொல்லியது போலவே, அவன் படிக்கப் படிக்க, நெருப்பில் எழுதியதுபோல் எழுத்துக்கள் படர்ந்து கொண்டே போயினl