பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q)f『。 李a ff。 339 வேர்வையை ஒற்றிற்று. உள்ளேயே கொஞ்சம் புழுக்கம் தான். - 'லல்லி என் தவறு-இல்லை, இல்லை." தவடையில் ஒரு கையால் மாற்றி மாற்றி தட்டிக்கொண்டாள். தவறு செய்தவள் நான். ஏமாந்து போனவள் கான். சின்ன வயசில் பெத்தவா ரெண்டு பேரையும் இழந்துட்டு தனியாக வாழ நேரிடும் என் போன்றவர்கள் கதி, இப்படித்தான். என்னை எமாத்தினவரைக் குத்தம் சொல்லி என்ன பயன்? எமாந்தவள் நான். அன்னிக்குகூடப் பார்த்தேன் அவனை. அவன் என்னைப் பார்க்கவில்லை. யாரோடேயோ போய்க் கொண்டிருந்தான். பெண்டாட்டியா? இன்னொரு எமாளியா? யார் கண்டது? ஒழுங்காய் வாழ்ந்தால் சரி. யாருக்குத்தான் ஆசை இல்லை? உங்கள் விளம்பரம் கண்டதும் வாழ்க்கையில் என் அந்தஸ்தை மீண்டும் பெற ஒரு சபலம். லல்லி பிரச்சனையை எந்த மாதிரி தீர்த்துக் கொள்வது என்று அப்போது தெரியாது. என்றேனும் ஒரு காள்...அதுவரை காகம்மா. அவ்வளவுதான். அந்த சமயத்துக்கு முக்யமாய், தெரிந்தது என் மீட்சி. அவ்வளவுதான்.' ரேணு புன்னகை புரிந்தாள். நாகம்மா வெளியே வந்தாள். அவள் இரு கைகளிலும் ஏந்திய தட்டில் இரு கோப்பைகளில் இருந்து மணமான ஆவி பறந்தது. பாஸ்கர் உயை மெதுவாக அனுபவித்துப் பருகினார். ஜன்னலுக்கு வெளியே சர்வ சிசப்தம். சந்துதான், ஆனா லும் சர்வ சுத்தம்,