பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர், ச், ச்ர். 99 எத்தனையோ விதமாய் என்னை ஏமாற்றினார்கள். அவர் களைப் பதிலுக்குப் பதில் அதைவிடக் கடுமையாக ஏமாற்றினேன். ஒரு சமயம் ஒருவனுடன் கூட்டு வியாபாரம் செய்ய நேர்ந்தது. எனக்கு அரை ரூபாய்க்குக் கணக்கு ஏமாற்றினான். ஆத்திரத்தில் கடையையே இரவில் பற்ற வைத்துவிட்டுப் போய்விட்டேன். காரிய கஷ்டத்தைவிட எண்ணத்தின் துரோகம் தான் தாங்கமாட்டேன் என்கிறது. ஆனால் எங்குச் சென்றால் என்ன தனிமை என்பது தனியாய்த்தானிருக்கிறது. நாளடைவில் கருமேகம் திரளுவதுபோல் திரண்டு பின்னாலேயே வந்து குரல் வளையைப் பிடித்துவிடுகிறது. மனிதன் தனது காரியங் களைச் செய்யும்படி அவனை இயக்கும் சக்திக்கு அலுப்பு இல்லாவிட்டாலும், காரியங்கள் அலுத்துவிடுகின்றன. அந்தச் சமயத்தில் தான் உலகம் எவ்வளவு பெரிதாயிருந்த போதிலும், தனிமையின் சுவர்கள் நான்கு புறங்களிலும் முளைத்துத் திமிர்த்து கின்று, ஆள் திரும்பக்கூட இடம் இல்லாத படி நெருக்குகின்றன. வாழ்க்கையை விட்டு எட்டி கின்றாலும் குமட்டுகின்றது. அத்துடன் இழைந்தாலும் குமட்டுகின்றது. அதில்தான் அதன் எதிர் பாராத தன்மை யிருக்கிறது. 'பரமபத படத்தில் ஏ னிகளிலெல்லாம் ஏறிவிட்டு, பெரிய பாம்பில் மாட்டிக்கொண்டு திடீரென்று அடிக் கட்டத்திற்கு வந்துவிட்டாற்போல் ஆகிவிட்டது. பழைய பாடங்களைத் திருப்புவதுபோல் சென்றுபோன காட் களும், சம்பவங்களும் நான் சிந்திக்க நேராத சமயங் களில் கூடத் திரும்பத் திரும்ப நினைவில் முளைக்க ஆரம்பிக்கின்றன. நான் என்னுள் கலகலக்க ஆரம்பித்து விட்டேன். -