பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



53


"தலைவர் எங்கே?"

"அவர் திருவனந்தபுரம் போயிருக்கிறார்! என்ன விசேஷம் உண்டா சசி?"

"இரண்டு வருஷத்திற்கு முன் காணாமல் போன என் தங்கை சுபத்ராவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது: அது சம்பந்தமாக தலைவரை யோசனை கேட்க வந்தேன்".

"அப்படியா, ரொம்பவும் நல்லது சசி! உங்கள் அம்மாவும் அப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்களே !"

"இல்லை! சுபத்ரா இறந்துவிட்டதாக எண்ணி ஒருவாறு அவர்கள் கவலையை மறந்திருந்தார்கள். இப்போது அவள் திரும்பியது அவர்களை வாட்டி வதைக்கிறது."

"இது என்ன வேடிக்கை சசி! காணாமல் போன மகள் திரும்பிவந்ததில் என்ன சங்கடம்? ரத்தபாசம் கூடவா உன் பெற்றாேர்களுக்கு இல்லாமல் போய் விட்டது?"

"இல்லை சிஸ்டர்! எனக்கு அதை வெளிக்காட்டிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறதே!"

"சும்மா சொல்லு: என்னிடம் சொல்லுவதற்கு உனக்குக் கூச்சம் வரலாமா? என்ன நடந்தது சசி?"

"சசி, தலை கவிழ்ந்தபடி சட்டைப் பைக்குள்ளிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். அது சுபத்ரா எழுதிய கடிதம்.

கண்ணாத்தாள் மனதுக்குள்ளேயே கடிதத்தைப் படித்துப் பார்த்தாள். அவள் முகம் கறுத்தது.

எதிரே நின்ற சசி, பத்து நாட்கள் பட்டினி கிடந்தவனைப் போல் சேர்ர்ந்து போயிருந்தான்.

கண்ணாவால் அவனுக்குச் சமாதானம் சொல்லத் தெரியவில்லை. கையிலிருந்த கண்ணாடிப் பாத்திரம் தரையில் விழுந்து நொறுங்கி விட்டதைப் போன்ற உணர்வு சசிக்கு! எந்த விஷயத்தையும் ரகசியமாக வைத்துக் கொண்டால் குடும்பம் தப்பித்துக் கொள்ளும் என்ற புத்திமதியை சசிக்கு எப்படிச்சொல்வது என்ற மனக்குழப்பம்கண்ணாவுக்கு!

உலகில் இரண்டு பெண்களைத் தான் நல்லவர்கள் என்று சொல்லுவார்கள். ஒருத்தி செத்துப் போனவள் இன்ைெருத்தி காணாமல் போனவள். இதில் சுபத்ரா